மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : 1974-ல் கலைஞர் ஏற்றிய 'மாநில உரிமை'...
கடன் பிரச்னையில் மூழ்கக் கூடாதா? - '25%' ஃபார்முலாவை கையிலெடுங்க; உடனே விழித்திடங்க மக்களே!
இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம்.
அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம்.
தேவையைத் தாண்டி, ஆடம்பரத்திற்கும் கடன் வாங்குவதில் தான் இந்தச் சிக்கல் தொடங்குகிறது.
இதை தடுக்க, இனி இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள் மக்களே...
எப்போதுமே உங்கள் வருமானத்தில் இருந்து 25 சதவிகிதத்திற்கு மேல் வட்டிக்குச் செல்லக் கூடாது. இது ஒரு கடன் வைத்திருந்தாலும் சரி... ஐந்து கடன் வைத்திருந்தாலும் சரி... அனைத்துக் கடன்களுக்குமே இந்த ரூல் பொருந்தும்.

ஓஹோ... ஒவ்வொரு கடனுக்கான வட்டியும் 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது அவ்வளவு தானே என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எத்தனை கடன் வைத்திருந்தாலும் மொத்த வட்டித்தொகை 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது.
வருமானம் வந்ததும் 30 - 35 சதவிகிதத்தை 30 - 35 வீட்டுச் செலவுகளுக்கு ஒதுக்கிவிடுங்கள். அடுத்த 25 - 30 சதவிகிதம் முதலீடுகளுக்கு, 10 சதவிகிதத்தை அவசரத் தேவைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் 25 - 30 சதவிகிதம் கடனுக்கு செல்லட்டும்.
இதை டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்தாலே, கடன் பிரச்னையில் மூழ்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.
அப்புறம் என்ன மக்களே, உடனே இந்த விஷயத்தைத் தொடங்குங்கள்!



















