திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு ...
முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் 'வாரன் பஃபெட்'.
இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், '20 ஸ்லாட் பன்ச் கார்டு' பற்றி பேசியது தற்போது செம்ம வைரல்.
அது என்ன '20 ஸ்லாட் பன்ச் கார்டு'?
இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் '20 ஸ்லாட் பன்ச் கார்டு'.

அதாவது, ஒருவருக்கு வாழ்க்கையில் 20 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது, வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும்.
ஒருமுறை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டால், அதை மீண்டும் மாற்ற முடியாது. அதனால், ஒவ்வொரு முடிவையும் பார்த்து யோசித்து எடுக்க வேண்டும்.
ஏன் 20 முறை மட்டுமே?
ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் பல தவறான முடிவுகள் எடுக்கக்கூடும்... அவசர முடிவுகளும் எடுக்கக்கூடும்.
20 வாய்ப்புகள் மட்டும் இருக்கும்போது, ஒவ்வொரு முடிவுகளையும் பார்த்து, நிதானமாக, யோசித்து எடுப்போம். இதனால், அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக வாய்ப்பில்லை.
மேலும், அந்த முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் பலன் தர வேண்டும் என்பதனால் சரியாக முடிவு செய்து எடுப்போம்.
இந்த தியரி முதலீடுகளுக்கு மட்டுமல்ல... பிசினஸ் தொடங்கி அனைத்திற்குமே பொருந்தும்.
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இன்னும் ஐந்து நாள்களில் புத்தாண்டு. இனி உங்களது '20 ஸ்லாட் பன்ச்'சைத் தொடங்கி அடுத்தடுத்த முடிவுகளை சூப்பராக எடுங்க மக்களே.
அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்:)














