ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு...
'இந்த' சூழலில் தங்க நகை அடமானக் கடனை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிவிடாதீர்கள்
தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன்களை விட, நம் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது, 'தங்க நகை அடமானக் கடன்'.
இந்தக் கடனை எப்போது வாங்கலாம்... எப்போது வாங்கக்கூடாது என்பதை விளக்குகிறார் My Assets Consolidation நிறுவனர் சுரேஷ் பார்த்தசாரதி.
"குடும்பத்தை நகர்த்துவதில் பிரச்னை, அவசரமாக பணம் தேவை, வியாபாரம் தொடங்குகிறோம்... போன்ற எந்தக் காரணத்திற்கு வேண்டுமானால் தங்க நகைக் கடன் வாங்கலாம்.
ஆனால், இந்தக் கடனைத் திரும்ப கட்டுவதற்கான பேக் அப் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பணம் வர வேண்டியிருக்கிறது... அடுத்த சில மாதங்களில் அந்தப் பணம் கையில் கிடைத்துவிடும் என்கிற சூழலில் தங்க நகைக் கடனை தாராளமாக வாங்கலாம்.
'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... இப்போது அடமானம் வைக்கிறேன்... அதை எப்படி மீட்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை' என்கிற பட்சத்தில், தங்க நகை அடமானக் கடனை தவிர்த்துவிடுவது தான் நல்லது.
ஆனால், நிச்சயம் பணம் தேவை என்றால், அந்த நகைகளை அடமானம் வைப்பதற்கு பதிலாக, விற்றுவிடலாம்".


















