செய்திகள் :

சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்கள்: "இப்போது மாநில அரசும் இந்தியைத் திணிக்கிறது" - ஸ்டாலின்

post image

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாத்தான்குளத்தில் புதிதாக வழிகாட்டிப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில்தான், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றிருப்பது குறித்து திமுகத் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்...

“இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.

தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.

எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் ‘U Turn’ அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?

வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!”

"கைது செய்தாலும் போராடுவோம்" - தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது

மத்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போராட்டத்திற்கு மும... மேலும் பார்க்க

"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" - என்ன சொல்கிறார் திருமாவளவன்?

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெக சார்பில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தி... மேலும் பார்க்க

தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? - வெளியுறவுத் துறை விளக்கம்

ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார்.இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவ... மேலும் பார்க்க

"வி.டி.சதீசன் கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசிப்பதில்லை" - UDF ஒருங்கிணைப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. ஆட்சி அமைத்து சில மாதங்களே ஆன நிலையில் கட்சிக்குள் அதிருப்தி வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எ... மேலும் பார்க்க

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி கத்தியால் குத்தினார்.இந்தத் தாக்குதல் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததில் நடந்தது என்று கூறப்படுகிறது.இந்தச் சம்பவத்தில் தாக்க... மேலும் பார்க்க

புதுச்சேரி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு வரும் அக்டோபர் 6-ம் த... மேலும் பார்க்க