செய்திகள் :

``சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ ஞாபகத்தில் இல்லை" - நடிகர் தனுஷ் உருக்கம்

post image

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா(90) கடந்த மாதம் 11-ம் தேதி இயற்கையெய்தினார். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய இவரிடம் படித்த பலர் பின்னாளில் சினிமா, எழுத்து எனப் பல தளங்களில் ஆளுமைகளாக வலம் வருகின்றனர்.

குறிப்பாக விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம் மூலம் பட்டிதொட்டியெங்கும் தமிழையும், தமிழர் பாரம்பர்யத்தையும் கொண்டுச் சேர்த்தார்.

சாலமன் பாப்பையா

90's கிட்ஸ் நினைவுகளில், விழாக்காலம் என்றால் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் முக்கிய அங்கம் வகிக்கும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு பட்டிமன்றம் சாலமன் பாப்பையா இல்லாமலே கடந்திருக்கிறது.

இது குறித்து நடிகர் தனுஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா அவர்கள் இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும், திரு. ராஜா அவர்கள் அந்த இடத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பாப்பையா ஐயா, உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Scene: "'எனக்கு 'சீன்' படத்துல பிடிச்ச பாட்டு இதுதான்'னு சூர்யா சார் சொன்னார்!" - விஜய் நரேன் பேட்டி

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கி... மேலும் பார்க்க

"இந்த வருஷம் தீபாவளி மதுரையிலுள்ள மாமனார் வீட்டுலதான்!" - மீனாட்சி அம்மன் கோயிலில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது 'சேயோன்', 'பார்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'சேயோன்' படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. அதனா... மேலும் பார்க்க

Kannan Ravi: "ஆடம்பர திருமணம் அவசியம்; ஐதீகப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?" - கண்ணன் ரவி

நடிகர் பிரபுதேவாவும் வடிவேலுவும் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் 'பேங் பேங்' திரைப்படம் ரிலீஸிற்குத் தயாராகி வருகிறது. இப்படத்தைத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தின... மேலும் பார்க்க

சண்டியர்: 'என் மானசீக ஆசானை நான் இயக்கப்போகிறேன், இந்தப் பயணத்தில்..!'- கமல் குறித்து அருண்குமார்

நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். முழு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்... மேலும் பார்க்க

'ஓம்' இசை வெளியீட்டு விழா: "இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு" - தனுஷ் மன்னிப்பு

நேற்று (நவம்பர் 6) சென்னையில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே அர... மேலும் பார்க்க

96 : காதல் கவிதை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 37

`சினி'ஸ்கோப் 3796 : காதல் கவிதை!தொடங்கும்போதே ’பிளானெட் எர்த்’ போன்ற ஒரு டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டரிக்குள் நுழைந்துவிட்டோமோ என்பதான ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது படம். வாழா என் வாழ்வை வாழவேதாழாமல் மே... மேலும் பார்க்க