செய்திகள் :

சிறுமியின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி பாலியல் வன்கொடுமை; ஈரோட்டில் அதிர்ச்சிச் சம்பவம்

post image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 10 - வகுப்பு தேர்வை எழுதி முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பகல் பொழுதில் சிறுமி தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட 39 வயதான பெயின்ட்டர் வெள்ளியங்கிரி என்பவர், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார்.

சிறுமியின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவவேன் என மிரட்டியிருக்கிறான். அச்சமடைந்த சிறுமி இது கொடுமை குறித்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்திருக்கிறார்.

கைதான வெள்ளியங்கிரி
கைதான வெள்ளியங்கிரி

இந்த நிலையில், அந்தச் சிறுமியின் உடல்நிலையில் திடீரென ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் கண்டு பதறிய தாய் விசாரித்திருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.

உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.‌ சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெயின்ட்டர் வெள்ளியங்கிரி மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க