செய்திகள் :

இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்; 24 வயது பெண் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்; ஈரோட்டில் அதிர்ச்சி

post image

ஈரோடு மாவட்டம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான வினோதினி. திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரைத் திருமணம் செய்து ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்கிற நபருடன் வினோதினிக்கு நட்பு ஏற்பட்டு, நெருக்கமாகப் பழகியுள்ளனர். வினோதினியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வினோதினியின் கணவருக்குத் தொடர்ந்து அனுப்பி வந்திருக்கிறார் நவனீதகிருஷ்ணன்.

இதனால் வினோதினி மீது வெறுப்படைந்த அவரின் கணவர், வினோதினியை அவரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் நட்பான நவனீதகிருஷ்ணனுடன் பழகுவதைத் தவிர்த்து வந்திருக்கிறார் வினோதினி.

மகனுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்த வினோதினியைச் சந்திக்க கடந்த திங்கள்கிழமை இரவு ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்த நவனீதகிருஷ்ணன், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

வினோதினி
வினோதினி

திடீரென வினோதினி மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்தியிருக்கிறார். உடல் கருகி துடிதுடிக்கப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் வினோதினி.

தீக்காயங்களுடன் உயிர் தப்பிய நவனீதகிருஷ்ணன், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வினோதினி அளித்த மரண வாக்குமூலத்தில், நவனீதகிருஷ்ணன் தன்னை தீ வைத்து எரித்ததாகக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஈரோடு காவல்துறையினர் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி பாலியல் வன்கொடுமை; ஈரோட்டில் அதிர்ச்சிச் சம்பவம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 10 - வகுப்பு தேர்வை எழுதி முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பகல் பொ... மேலும் பார்க்க

`கேரளத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல முயன்றால் குண்டர் சட்டம் பாயும்'- குமரி எஸ்.பி அதிரடி!

விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட காவல்துறையினர் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர். குறிப்பாக விபத்தை ஏற்படுத்தும் அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களில்... மேலும் பார்க்க

`பேராசை கொண்டவர்களை பிராங்க் செய்தேன்'- சேலத்தில் பெண்களை மொட்டையடிக்க வைத்த நபர் `கூல்' வாக்குமூலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புது கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண்மணியிடம், தாசில்தார் என செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், ``கொரோனா போன்ற புதுவித நோய் பரவலில் இருந்து... மேலும் பார்க்க

வேலூர்: காவல் நிலையம் முன்பு பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; குடிபோதையில் அத்துமீறிய தந்தை - மகன் கைது!

வேலூர் தெற்கு காவல் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாகவந்த ஆட்டோவை... மேலும் பார்க்க

"உங்க மகள் சாவதைப் பாருங்க" - மனைவியைத் தூக்கில் தொங்கவிட்டு மாமனாருக்கு வீடியோ காலில் காட்டிய கணவன்

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிலாகி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ(23). இவரது கணவர் பிரவீன். டிரைவராக வேலை செய்து வருகிறார். இதனால் அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்வா... மேலும் பார்க்க

சென்னை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அநாகரிகம்; போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை!

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் செ... மேலும் பார்க்க