செய்திகள் :

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

post image

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின் மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக  விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிரஞ்சனைக் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 5-ந்தேதி இரவு கிளைச் சிறையின் சமையலறைப் பகுதி வழியாக மேலே ஏறி வெளியே குதித்து தப்பி ஓடினார்.

நிரஞ்சன்
நிரஞ்சன்

மறுநாள் 6-ந்தேதி காதலியைச் சந்திப்பதற்காக மீனாட்சிபுரம் காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்த நிரஞ்சனை போலீஸார் கைது செய்து தூத்துக்குடி மாவட்டச் சிறையான பேரூரணி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த நிரஞ்சன் சரிவர ஆஜராக இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், நிரஞ்சனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதனை தொடர்ந்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீஸார் நிரஞ்சனை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது நிரஞ்சன் தப்பி ஓடியுள்ளார்.

விளாத்திகுளம் காவல் நிலையம்
விளாத்திகுளம் காவல் நிலையம்

ஏற்கனவே ஒருமுறை கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பித்து போலீஸார் நிரஞ்சனைக் கைது செய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக போலீஸாரிடம் இருந்து தப்பி உள்ளார்.

பின்னர், போலீஸாரின் தீவிர தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் அலட்சியம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அதே நேரத்தில் இரண்டாவது முறையாக கைதி தப்பியோடினாரா? அல்லது தப்ப விட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க