செய்திகள் :

'சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதா?' - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

post image

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அமைச்சர் அருண் ராஜ், ``தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

இது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வைக்கிறது" எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கப் பதிவைப் பகிர்ந்திருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதில், ``தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு. TN Health Bulletin குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

இது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வைக்கிறது:

1. வெளியீடு நிறுத்தமும், விரிவான மாற்றங்களும் மேம்பாடும் (Comprehensive Revival): மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிடுவது 2024 ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது.

கடந்த ஆட்சி காலத்திலேயே இந்த ஆண்டு- 2026 பிப்ரவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் இந்தச் செய்திக்குறிப்பை மேலும் மெருகேற்றி, விரிவான மற்றும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய புதிய வடிவில் வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

2. புதிய அறிக்கையில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும்? பழைய முறையை விடவும், இனி வரும் செய்திக்குறிப்புகள் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் கீழ்க்கண்ட அம்சங்கள் புதிதாக இணைக்கப்பட உள்ளன:

• விரிவான பின்னணித் தகவல்கள்: வெறும் எண்களாக மட்டுமின்றி, தரவுகளுக்கான விரிவான விளக்கங்கள் (Contextual information).

• புதிய முன்னெடுப்புகள்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் தொடங்கப்பபடும் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான தொகுப்பு.

• மாநில அளவிலான புதிய குறியீடுகள் மற்றும் மாவட்ட வாரியான குறியீடுகள் (District-wise Indicators): மாநிலத்தின் பொது சுகாதாரச் செயல்பாடுகளை இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில், மாநில அளவிலான புதிய குறியீடுகளும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான முக்கிய சுகாதாரக் குறியீடுகள் இனி அறிக்கையில் இடம்பெறும்.

அருண் ராஜ்
அருண் ராஜ்

3. எங்களின் நோக்கம் (Vision & Purpose): மருத்துவத் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான பொது சுகாதாரத் திட்டமிடலை (Evidence-based public health planning) மேலும் வலுப்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் நமது அரசின் முக்கிய நோக்கமாகும். புதிய வடிவிலான இந்தச் செய்திக்குறிப்பு அதற்கான மிகச் சிறந்த கருவியாகச் செயல்படும். மேம்படுத்தப்பட்ட, விரிவான தகவல்களை உள்ளடக்கிய புதிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' - ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் ஜேசிபி மூலம் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர். சோதனையின் முடிவில் உடல்கள... மேலும் பார்க்க

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பூபலான். வழக்கறிஞரான இவர் த.வெ.க-வின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா. கடந்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆர்.ஏ.சி எனப்படும் ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் ஒரு படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து க... மேலும் பார்க்க

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: Instagram Influencer-ஆன இளம்பெண் கைது செய்யப்பட காரணம் என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தக் கொள்ளைச் ... மேலும் பார்க்க

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' - புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு அரசாயி மலையாளி அம்மன் திருக்கோயிலில், தென்கிழக்குப் பகுதியில் புதிதாக கழிப்பிடம் (கழிவறை) கட்டப்பட்டுள்ளது. இந்ந... மேலும் பார்க்க

``செஞ்சி சிறுமி காணாமல்போய் 35 நாள்கள் கடந்துவிட்டன; கேக் ஊட்டிக்கொண்டிருக்கிறார் முதல்வர்"- கனிமொழி

செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஒரு மாதம் ஆகியும் சிறுமி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், இன்றைய தினம் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் திமுக... மேலும் பார்க்க