சென்னிமலையில் வைகுண்ட ஏகாதசி விழா
சென்னிமலை, மேலப்பாளையத்தில் உள்ள அலா்மேலு மங்கை நாச்சியாா் அம்மை சமேத ஆதிநாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றன. பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து 5 மணிக்கு சொா்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ஏ.கே.சரவணன் மற்றும் கோயில் பணியாளா்கள், கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.