செய்திகள் :

சேலம்: ரூ.1,000 கமிஷனுக்கு ஆசை; 7500 மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.75 கோடி மோசடி; என்ன நடந்தது?

post image

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி பகுதிகளைச் சேர்ந்த சிலர், தாங்கள் சமூக சேவை செய்யும் பெஸ்ட் எம்பவர்மென்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து வலை விரித்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து தங்களின் டிரஸ்ட்டுக்கு வரும் நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற முடியவில்லை எனவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து எடுத்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

மோசடி புகார்
மோசடி புகார்

இதனை நம்பிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்தக் கும்பலிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆவணங்களை வாங்கிய அந்த மோசடி கும்பல், வங்கி அதிகாரிகள் சிலரின் துணையோடு மாணவர்களுக்கே தெரியாமல் தனியார் வங்கிகளில் `பசுமாடு வளர்ப்பு மற்றும் விவசாயக் கடன்' என்ற பெயரில் தலா ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறது.

மாணவர்களின் வங்கிக் கணக்கில் வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் தொகை வந்திருக்கிறது. ஆனால், டிரஸ்ட் பணம் வந்ததாகக் கூறி ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்து விட்டு மொத்த பணத்தையும் வேறொரு வங்கிக் கணக்கிற்குப் பெற்றிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகச் சத்தமின்றி இந்த மோசடி நடந்து வந்திருக்கிறது.

வங்கிகளிலிருந்து சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்குக் கடன் தொகை குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பதறிய மாணவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்கிறார்கள். அந்த அறக்கட்டளை நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களோ ரவுடிகளை வைத்து மாணவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

இந்த நிலையில், சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முஷ்ரப் பாட்சா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்துள்ளனர். மாணவர்களின் புகாரின் அடிப்படையில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

விசாரணையில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார் ரூ.75 கோடி வரை கடன் மோசடி அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .

மோசடி புகார்
மோசடி புகார்

இதையடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்ட சின்ன திருப்பதியைச் சேர்ந்த கண்ணகி (45), அவரின் கூட்டாளி முத்துக்குமரன் (36) ஆகிய இருவரை போலீஸார் கைது தூக்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள மோனிஷா உள்ளிட்ட மேலும் சிலரையும், போலி ஆவணங்களுக்குத் துணைபோன வங்கி அதிகாரிகளையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மதுரை நகைக்கடையில் தனியாளாகக் கொள்ளை; அதிர வைத்த திருடன்; 9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் தனிஷ் நகைக் கடை கடந்த மாதம் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நகைக் கடையைத் திறந்து பார்த்தபோது விற்பனைக்காக வைக்கப்ப... மேலும் பார்க்க

மதுரை: தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்; தேடிப் பிடித்த போலீஸ்

கடந்த 2024 மே 20 ஆம் தேதிதிருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையின்போது ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்துதிண்டுக்கல்லைச் சேர்ந்த சுப... மேலும் பார்க்க

பாமக நிர்வாகி கொலை: ``இப்படிச் சொல்ல அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா?" -ராஜ்மோகனுக்கு திலகபாமா கண்டனம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தில் கடந்த 9-ம் தேதி மாலை, ஞானவேல் என்ற பா.ம.க பிரமுகர் அதே பகுதியைச் சேர்ந்த ரௌடியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், பா.ம.க பொருளாள... மேலும் பார்க்க

``இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்" - ராஜினாமாவை அறிவித்த CEO ஜென்சன்

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; சோகமாகக் காணப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தி.மு.க ... மேலும் பார்க்க