செய்திகள் :

'சொந்த நாட்டு மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம்.!' - மாணிக்கம் தாகூர்

post image

"டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கும்" என்று தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி பேசியிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால், அவர்களைச் சுட்டுக் கொன்றிருப்பார்கள்” என்று தனது மனதிலுள்ள உண்மையான எண்ணத்தை வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி
கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி

தேசவிரோதிகள் ஆக்கப்படுகிறார்கள்

இது ஏதோ தற்செயலாக வந்த வார்த்தை அல்ல.

இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உலகப் பார்வையையே வெளிப்படையாக உணர்த்துகிறது.

அதாவது, மக்களாட்சியில் மாற்றுக்கருத்து என்பது அதன் உயிர்நாடி அல்ல. மாறாக, அது துப்பாக்கித் தோட்டாக்களால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதே அது.

தங்கள் எதிர்காலத்தையே சீரழித்த வினாத்தாள் கசிவைக் கண்டித்துத் துயரத்துடன் போராடும் மாணவர்கள், இந்த அரசால் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வியைக் கேட்கும் கணத்திலேயே 'தேசவிரோதிகள்' ஆக்கப்படுகிறார்கள்.

ஒரு நாட்டை நம்பி ஒப்படைக்க முடியாது

திருவள்ளுவர் சொல்லியுள்ளார்...

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்”

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிக்கும் சிறந்த வழி, அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிட்டு அவ்வளவோடு அதை மறந்துவிடுதலாகும்.

ஆனால், துயரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அளிக்கும் பதில் இதற்கு முற்றிலும் மாறானது. அவர்களை அவமானப்படுத்துவது, குற்றவாளிகளாகச் சித்தரிப்பது மற்றும் அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட விரும்புவது.

சொந்த நாட்டின் மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம், ஒரு நாட்டை நம்பி ஒப்படைக்க முடியாது". என்றிருக்கிறார்.

`24 வயது... ஆதார் அட்டை கூட இல்லை!' - நான்கு ஆண்டுகளாக அலையும் கோவை இளைஞர்

24 வயது, ஆதார் அட்டை இல்லை. வாக்காளர் அட்டை இல்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லை. இருப்பிடச் சான்றிதழ் இல்லை. அரசின் எந்த அடிப்படை ஆவணமும் இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு அலுவலகங்களைச் சுற்றி வருகிற... மேலும் பார்க்க

கரப்பான்பூச்சி போராட்டத்தில் த.வெ.க - தி.மு.க-வின் கண்ணாமூச்சி ஆட்டம் - வெளிப்பட்ட பா.ஜ.க ‘பாசம்‘!

தலைநகர் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தை மட்டுமல்ல; தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகள் எங்கே நிற்கின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக் க... மேலும் பார்க்க

"அவர்கள் அப்படித்தான் பிறக்கிறார்கள்; அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு"- LGBTQ+ குறித்து மோகன் பகவத்

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று (ஜூலை 26)ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் LGBTQ+ சமுதாயத்தினர் குறித்து பேசியிருக்கிறார்.அவர் பேசியதாவது..."இங்கே சமுதாயத்தில் LGBTQ+ இருக்கிறது தான். சமூகத்... மேலும் பார்க்க

"சின்ன வயதில் பெற்றோர் சொன்னால் கேட்டுக்கொள்வோம்; ஆனால், இன்று.!" - Gen Z குறித்து மோகன் பகவத்

'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா' - டெல்லி ஜந்தர் மந்தரில் ஜென் Z தலைமுறையினர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த நேரத்தில் டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தற்க... மேலும் பார்க்க

`மேற்கு தொடர்ச்சி மலை படம் போல எங்களுடைய நிலத்தை விட்டு அகற்ற போகிறார்கள்' - நடிகர் ஆண்டனி வேதனை

திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும், அதனால் இங்கிருப்பர்கள் வெளியேற வேண்டும் என அரசு... மேலும் பார்க்க