செய்திகள் :

அமெரிக்கா, ஈரான் தாக்குதல் திடீர் நிறுத்தம் ஏன்? ட்ரம்ப் - ஜே.டி.வான்ஸ் சந்திப்பு முக்கிய காரணம்?

post image

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மாறி மாறி கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா, ஈரான் தற்போது மோதலுக்கு சின்ன இடைவேளை கொடுத்துள்ளது.

என்ன நடக்கிறது?

கடந்த இரண்டு வாரங்களாக, கப்பல்கள் மீது தாக்குதல், கட்டமைப்புகள் மீது தாக்குதல் என தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் குண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஆனால், திடீரென்று கடந்த இரண்டு நாள்களாக இரு நாடுகளும் தாக்குதலை நடத்தவில்லை. இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லையென்றாலும், இந்தப் போர் நிறுத்தம் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்த இடைவேளை காட்டுகிறது.

ஈரான் போர்
ஈரான் போர்

இதனால்...

இரண்டு நாள்களாக எந்தத் தாக்குதலும் இல்லாததால் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 5 சதவிகிதம் குறைந்துள்ளது.

அமெரிக்க செய்தி நிறுவனங்களின் தகவலின் படி...

கடந்த வாரம் நடந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கக் கூட்டுப் படைத் தலைவர்கள் குழு, 'இந்தப் போர் நீடித்தால் என்னென்ன பிரச்னைகள் வரலாம்' என்பதை விளக்கியிருக்கிறார்கள்.

ஈரான் போரில் அமெரிக்க ராணுவ தளவாடங்களில் இருக்கும் ஆயுதத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றன. அமெரிக்க வீரர்களும் தாக்குதலில் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். அடுத்ததாக, வரும் நவம்பரில் அமெரிக்காவில் மிட்-டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நேரத்தில் போரை தொடர்வது அமெரிக்காவிற்கு நல்லதல்ல.

இதனால் தான், ட்ரம்ப் தாக்குதலை நிறுத்தியுள்ளார்... பேச்சுவார்த்தைக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று கூறப்படுகிறது. இதனால், ஈரானும் இதற்கேற்ற மாதிரி போரை நிறுத்தியுள்ளது.!

'சொந்த நாட்டு மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம்.!' - மாணிக்கம் தாகூர்

"டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கும்" என்று தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ... மேலும் பார்க்க

"அவர்கள் அப்படித்தான் பிறக்கிறார்கள்; அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு"- LGBTQ+ குறித்து மோகன் பகவத்

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று (ஜூலை 26)ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் LGBTQ+ சமுதாயத்தினர் குறித்து பேசியிருக்கிறார்.அவர் பேசியதாவது..."இங்கே சமுதாயத்தில் LGBTQ+ இருக்கிறது தான். சமூகத்... மேலும் பார்க்க

"சின்ன வயதில் பெற்றோர் சொன்னால் கேட்டுக்கொள்வோம்; ஆனால், இன்று.!" - Gen Z குறித்து மோகன் பகவத்

'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா' - டெல்லி ஜந்தர் மந்தரில் ஜென் Z தலைமுறையினர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த நேரத்தில் டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தற்க... மேலும் பார்க்க

`மேற்கு தொடர்ச்சி மலை படம் போல எங்களுடைய நிலத்தை விட்டு அகற்ற போகிறார்கள்' - நடிகர் ஆண்டனி வேதனை

திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும், அதனால் இங்கிருப்பர்கள் வெளியேற வேண்டும் என அரசு... மேலும் பார்க்க

பாஜக: 10 ஆண்டுகளில் 5-வது அமைச்சர்; கல்வித் துறை கண்ட மாற்றங்களும் திருப்பங்களும்! | ஓர் பார்வை

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் கல்வித் துறை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. ஆரம்பத்தில் 'மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்' (MHRD) என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பின்னர், ஜூலை 29, 2020 அ... மேலும் பார்க்க

`பினராயி விஜயனுடன் நெருக்கத்தால் மகளுக்கு ஒப்பந்தம்' - சிஎம்ஆர்எல் நிர்வாகி வாக்குமூலத்தால் சிக்கல்!

மாதப்படி வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனையும் அவரது மகள் வீணா விஜயனையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா, அமலாக்கத்துறையிடம் அளி... மேலும் பார்க்க