செய்திகள் :

``சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!" - CJP நிறுவனர்

post image

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இன்று சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 25-வது நாள். 25 நாள்கள் உணவின்றி இருப்பது அவரது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தாகும். சோனம் சாருக்கு எதுவும் ஆகக் கூடாது என்று நான் விரும்புகிறேன். எனவே, சோனம் சார் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நமது போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும், நாம் பின்வாங்க மாட்டோம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

இத்துடன் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நமது இந்தப் போராட்டம் இதேபோல் அமைதியான முறையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும். எனவே, நமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்களும் இதேபோல் அமைதியான முறையில் உங்களது போராட்டத்தைத் தொடருங்கள். நமது போராட்டத்திற்கோ அல்லது நமது நாட்டிற்கோ களங்கம் விளைவிக்கும் வகையிலான எந்தவொரு தவறான செயலிலும் நாம் ஈடுபட மாட்டோம். நமது போராட்டம் அமைதியான வழியில் தொடர்ந்து நடைபெறும்.

தவறான செயல்களில் ஈடுபடுபவர்களும், தவறான முழக்கங்களை எழுப்புபவர்களும் ஒருபோதும் நமது போராட்டத்தின் அங்கமாக இருந்ததில்லை, இனி இருக்கவும் முடியாது. நமது போராட்டம் மகாத்மா காந்தியின் வழியிலும், டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் வழியிலும் அமைதியாகத் தொடர்ந்து நடைபெறும். எனவே, சோனம் சாரிடம் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவுசெய்து உங்களது உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க

"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!

சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை மேம்படுத்த 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் வ... மேலும் பார்க்க

'அவதூறு வழக்குகளுக்கு அவசர கைதுகள்!' - இதுதான் ஜனநாயகத்தனமா முதல்வரே?

தவெக அரசு அமைந்த 2 மாதங்களில் அரசியலர்கள் மீதும் சமூகவலைதளவாசிகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்து கைது செய்யும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணம், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனுட... மேலும் பார்க்க