செய்திகள் :

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

post image

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், ``தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் செப்டம்பர் 17-ம் தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

காலை உணவுத் திட்டம்

ஆரம்பத்தில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது 37,447 பள்ளிகளைச் சேர்ந்த 19,34,230 தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இப்புதிய விரிவாக்கத்தின் மூலம், தமிழ்நாட்டில் செயல்படும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 12,87,133 மாணவர்கள் பயனடைவார்கள். ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அடிப்படையில், ஆண்டிற்கு 210 வேலை நாட்களைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் மொத்தம் ரூ.343.55 கோடி செலவிட நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிய தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க

"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!

சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை மேம்படுத்த 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் வ... மேலும் பார்க்க

``சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!" - CJP நிறுவனர்

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இன்று சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 25-வது நாள். 25 நாள்கள் உணவின்றி இருப... மேலும் பார்க்க

'அவதூறு வழக்குகளுக்கு அவசர கைதுகள்!' - இதுதான் ஜனநாயகத்தனமா முதல்வரே?

தவெக அரசு அமைந்த 2 மாதங்களில் அரசியலர்கள் மீதும் சமூகவலைதளவாசிகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்து கைது செய்யும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணம், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனுட... மேலும் பார்க்க