செய்திகள் :

"ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காத்து வாங்கியது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

post image

"சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தருமபுரியில் நடந்த அதிமுக விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "இன்று தவெக ஆட்சிக்கு வந்திருப்பது ஒரு விபத்து, இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, ஒரு கொள்கையும் கிடையாது. இந்த அரசு ஒரு மாததில் ரூ. 28 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்த ஆண்டில ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கினால்தான் அரசை நடத்த முடியும்.

ஏரியில் வண்டல் மணல் எடுப்பவர்களை மாபியா என்று கூறும் அமைச்சர், மாபியாக்களைத் தப்பிக்க விட்டு விவசாயிகளைக் கொச்சைப்படுத்துகிறார். ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சராகி விட்டார்கள். மூன்று பேர் மட்டும்தான் பேசுகிறார்கள், இன்று தமிழகமே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தருமபுரி விழாவில் எடப்பாடி பழனிசாமி
தருமபுரி விழாவில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் தேவைக்கு மட்டும கடன் வாங்கப்பட்டது. கஜா புயல், கொரோனா ஊரடங்கு எனப் பல்வேறு பிரச்னைகளை அதிமுக ஆட்சி எதிர்கொண்டாலும், இறுதி ஆண்டில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் கடனை மட்டும்தான் வாங்கியது.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்துள்ளது? பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது.

ஜன நாயகன் படத்துக்கு அப்படி இப்படி என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால், படம் வந்த ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காத்து வாங்கியது. அப்படித்தான் இந்த 100 நாள் ஆட்சியும் உள்ளது. ரீல் விடுகிறார்கள் அல்லது ரில்ஸ் போடுகிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்பட்டது.

அதன் பின்பு ஜெனரேட்டர் மின்சாரத்தால் மீண்டும் பேசியவர், "அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதுதான் இந்த ஆட்சியோட லட்சணம்" என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க