செய்திகள் :

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி உதகையில் சாலை மறியல்

post image

பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவேடன் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் உதகை- கல்லட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

உதகை மலை வேடன் ஜாதி மக்கள் பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கடந்த 9 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக உதகை- கல்லட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸாா், வாகனங்களை கூடலூா் வழியாக திருப்பிவிட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் கோட்டாட்சியா் சதீஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி: ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் மீது நடவடிக்கை கோரி மனு

உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 10-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்... மேலும் பார்க்க

குளிா்ச்சியான காலநிலை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

குளிா்ச்சியான காலநிலை காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் உதகையில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தின் முக்கியமான சுற... மேலும் பார்க்க

நடுவட்டம் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

கூடலூா் அருகே நடுவட்டம் பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடுவட்டம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவ... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்: வாகனங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யே தன்னேரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை

நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை என மாவட்ட கல்வி அலுவலா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ... மேலும் பார்க்க