'இது முதல் முறை' - மீண்டும் பூமிக்குத் திரும்பிய ஸ்டார்ஷிப் விண்கலம்; எலான் மஸ்க...
"ஜென்சன் ஹுவாங் இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிகப்பு" - காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்
என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங். இவர் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாகப் பணியாற்றினார்.
சமீபத்தில், இவர் மீது எழுந்த புகார்களால் (சீன உளவாளியுடன் தொடர்பு, நிறுவனத்தில் பணியாற்றியவர்களுடன் உறவு) தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார் ஜென்சன் ஹுவாங்.
இவருக்குப் பதிலாக, என்விடியா நிறுவனத்தின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக கோலெட் கிரெஸ் கடந்த நவம்பர் 12-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இப்போது அந்த நிறுவனம் தகுந்த நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடி வருகிறது.
எலான் மஸ்க் பதிவு
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், "என்விடியாவின் விநியோகச் சங்கிலியை ஜென்சன் மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.
அவற்றில் பல ஒப்பந்தங்கள் எழுத்துப்பூர்வமானவை அல்ல; ஜென்சனுடனான வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நடந்தவை.
ஜென்சன் இல்லையென்றால், அவற்றில் சில முக்கியமான ஒப்பந்தங்களாவது கைநழுவிப் போக வாய்ப்புள்ளது.
ஒரு நொடி கூட...
கம்ப்யூட் விநியோகம் குறித்து ஜென்சன் என்னிடம் வாக்குறுதி அளித்தாலோ, அல்லது உதிரிபாகங்களை விரைவாக அனுப்புமாறு நான் கேட்டாலோ, அவர் எப்போதுமே சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.
நாங்கள் பின்னர்தான் ஒரு கட்டத்தில் அதற்கான கொள்முதல் ஆர்டரை உருவாக்குவோம்.
ஆனால், இடையில் அது நடக்காமல் போய்விடுமோ என்று ஒரு நொடிகூட நான் சந்தேகப்பட்டதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.



















