கந்த சஷ்டி விரதம் : 8 லிங்கங்கள்; 4 உற்சவர்கள்; அற்புத தகவல்கள் - திருச்செந்தூரி...
ஜோக்ஸ் - தோல்வியில் வெற்றி!

“சாட்ஜிபிடி மேல தலைவருக்கு என்ன கோபம்?”
“ `என்னோட வெற்றிக்கு என்ன காரணம்?’னு கேட்டதுக்கு ‘ரீல்ஸ்தான்’னு அதுவும் சொல்லிடுச்சாம்!”
- அம்பை தேவா

“ஒரு லட்சத்து ஐம்பத்தி மூவாயிரத்து நானூத்தி நாற்பத்திரெண்டு பேருக்குப் பண உதவி பண்ணியிருக்கேன்னு தலைவர் சொல்றாராமே...”
“ஓட்டுக்குக் காசு குடுத்ததைத்தான் அப்படிச் சொல்லிட்டுத் திரியிறாரு!”
- மலர்சூர்யா

``தலைவர் எதையும் நம்பவே மாட்டாரு...’’
``அதுக்காக, ‘நான் எப்படி ஜெயிச்சேன்’னு தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல மனுப்போட்டு கேக்குறது நல்லாவா இருக்கு..!’’
-சென்னா

“சொன்னாக் கேளுங்க தலைவரே... நீங்க நினைக்கிற மாதிரி தேர்தல் ஆணையம் ‘தோல்வியில் வெற்றி’ன்னுல்லாம் சான்றிதழ் தர மாட்டாங்க.”
- ப.சோமசுந்தரம்

















