இரண்டே வரிகள்தான்... உங்கள் பிள்ளைகளின் ஆயுளைக் காக்கும் சக்தி மிக்க ஆயுள் தேவ...
ஜோக்ஸ்..!

“நம்ம தலைவருக்கு சந்தேகம் ஜாஸ்தின்னு எப்படிச் சொல்றே?”
“எதுக்காக மக்கள் நம்மை ஜெயிக்க வெச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ரகசியமா குழு அமைச்சிருக்காராம்!”
- என்.கே.பாலசுப்ரமணியன்

“சிஸ்டர் ஏதாச்சும் கேஸ் வந்தா உள்ள அனுப்புங்க...”
“டாக்டர் நேத்து நீங்க பண்ணின ஆபரேஷனுக்கு உங்க மேலதான் கேஸ் வந்திருக்கு...”
- ஆனந்தி ராமகிருஷ்ணன்

``ஆபரேஷன்ல என்ன பிரச்னை!?’’
``டாக்டர் ரீல்ஸ் எடுக்க மறந்துட்டாராம். அதனால மறுபடியும் பண்ணணுமாம்!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

“போருக்குப் புறப்படும் மன்னர் இரண்டு ஷூக்களை எடுத்துவைக்கிறாரே?”
“ஆமாம்... போகும்போது வாக்கிங் ஷூ, வரும் போது ரன்னிங் ஷூ!”
- கமலக்கண்ணன்.இரா


















