செய்திகள் :

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி

post image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனச் சி.ஜே.பி-யினர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் சி.ஜே.பி-யினரையும் மாணவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

துருவ் ராட்டி | Dhruv Rathee
துருவ் ராட்டி | Dhruv Rathee

இந்தப் போராட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகக் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் துருவ் ரதி, நேற்று நள்ளிரவுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர், "எனது வீட்டில் நேற்று காலை 7 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சீருடை அணியாத சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் என் அறைக்குள் வந்தார்கள்.

அவர்கள் யார் என்று கேட்பதற்குள் என்னைத் தரதரவென இழுத்துச் சென்றார்கள். என்னைச் செருப்புகூட அணிய அனுமதிக்காமல் கீழே அழைத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

என்னை எந்தச் சட்ட அடிப்படையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பதையும் அவர்கள் சொல்லவில்லை. எனது வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது.

என் பெற்றோரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது சட்டப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதோ அல்ல.

இது அப்பட்டமான கடத்தல். நேற்று நள்ளிரவில் நான் விடுவிக்கப்பட்டாலும், என் வீட்டைச் சுற்றி இன்னும் சிலர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பது போல் இருக்கிறது.

ஜனநாயக வழியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுபவர்களையும், எதிர்ப்புக் குரல்களையும் ஒடுக்குவதற்காகவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது ஜனநாயக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்" எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

`சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: இப்போது தேவைதானா?' - உயர் கல்வித்துறையின் சிக்கல்கள்| ஓர் அலசல்

University of Western Australiaதமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக் கழகமாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்துக்கு, UGC ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின், 'குரூப் ஆப் எய்... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் சட்டவிரோதமாக செயல்படுகிறதா குவாரி? எஸ்பி ஆய்வு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்தக் கல்குவாரியில் இர... மேலும் பார்க்க

'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' - தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில் த.வெ.க வளர்ச்சியை தடுக்க மீனவ சமூகத்தினருக்கு கட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் ... மேலும் பார்க்க

'5 மாதங்களாக தமிழ்நாட்டின் GST வசூல் இறங்கு முகம்' - நிபுணர் கூறும் பொருளாதாரக் காரணம் என்ன?

கடந்த மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மைனஸ் என்கிற கேள்வி எழுவது நியாயமானதே. இந்த வசூல் குறைவிற்கு ஆட்சி மாற்றம் போன்ற அரசியல் காரணங... மேலும் பார்க்க

மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `இது அங்கன்வாடிக்கு அனுப்பப்படும் முட்டைதானே?' - இலவச முட்டைகள் வெளியில் விற்பனையா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 215 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. 1,397 ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதே... மேலும் பார்க்க