செய்திகள் :

டெல்லி: 1993 முதல் 2026 வரை ! - ஜந்தர் மந்தரில் நடைபெற்ற முக்கிய போராட்டங்கள் என்னென்ன?

post image

SIR விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) ஆகியவை மத்திய டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டங்களுக்கான இடங்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி காவல்துறை நீக்கியிருக்கிறது.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், இந்தியாவின் ஜனநாயகக் குரல்களும் மக்கள் போராட்டங்களும் எதிரொலிக்கும் மிக முக்கிய மையப் பகுதி.

ஜந்தர் மந்தர்
ஜந்தர் மந்தர்

நாட்டின் மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் வரும் சாமானிய மக்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் தங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இடமாக ஜந்தர் மந்தர் திகழ்ந்திருக்கிறது.

இந்நிலையில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த முக்கியப் போராட்டங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1993: பொருளாதார மற்றும் வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டம்

1990-களின் தொடக்கத்தில் இந்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நாட்டில் உருவான வகுப்புவாதப் பதற்றங்களுக்கு எதிராக இப்போராட்டம் நடத்தப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்ட 33 அமைப்புகள் ஒன்றிணைந்து ஜந்தர் மந்தரில் 'சிறை நிரப்புங்கள்' போராட்டத்தை நடத்தின.

2011: அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கம்

நாட்டில் நடந்த தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை என்ற கோரிக்கை எழுந்தது.

ஊழலைத் தடுக்க 'ஜன லோக்பால்' மசோதாவை இயற்றக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஐந்து நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இது நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற பெரிய இயக்கமாக மாறியது.

2012: நிர்பயா நீதிப் போராட்டம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கோரியும், பெண்களுக்குப் பொதுவெளியிலும் சட்டரீதியாகவும் உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஜந்தர் மந்தர்
ஜந்தர் மந்தர்

2014: நிடோ டானியா மரணமும் வடகிழக்கு மக்களுக்கான ஆதரவுப் போராட்டமும்

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிடோ டானியா டெல்லியில் இன பாகுபாட்டுடன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைக் கண்டித்தும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நகர்ப்புறங்களில் நடக்கும் இனப் பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

2017: தமிழக விவசாயிகளின் 41 நாள் போராட்டம்

தமிழகத்தில் ஏற்பட்ட தீவிர வறட்சி மற்றும் வேளாண் கடன் சுமையால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

கடன் தள்ளுபடி மற்றும் நிவாரண உதவிகளை வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் பல்வேறு கவன ஈர்ப்பு முறைகளில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.

2023: மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார்ப் போராட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முன்னணி வீரர்கள் ஜந்தர் மந்தரில் வீதியில் இறங்கி, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2024: நீட்-யுஜி (NEET-UG) தேர்வு முறைகேடு எதிர்ப்புப் போராட்டம்

தேசிய அளவில் நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வான NEET-UG வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாணவர்களும் பெற்றோர் அமைப்புகளும் தேர்வை ரத்து செய்து முறையான விசாரணை நடத்தக் கோரி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஜந்தர் மந்தர்
ஜந்தர் மந்தர்

2026: நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையும் மத்திய அமைச்சரின் ராஜினாமாவும்

பின்னணி: நீட்-யுஜி தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. இச்சம்பவத்தைக் கண்டித்து வலுவடைந்த மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தின் தீவிரத்தால், அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விலகும் சூழ்நிலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

அரிசி முதல் காய்கறி வரை.! - திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? அரசு என்ன செய்ய வேண்டும்?

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய்,... மேலும் பார்க்க

"ஒருவேளை வந்தால் உடனே சேர்த்துக்கொள்ளுங்கள்" - பாஜக தலைவருக்கு முதல்வர் சிவக்குமார் பதிலடி

கர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. தற்போதும் அது போன்ற ஒரு முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கர்நாடகா முதல்வர் சிவக்குமா... மேலும் பார்க்க

``சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்!"- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தத... மேலும் பார்க்க

“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” - அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி

55-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிவரும் அ.தி.மு.க, இடைத்தேர்தலில் சிட்டிங் தொகுதிகள் இரண்டையும் த.வெ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதையடுத்து, மீண்டும் 'அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரா... மேலும் பார்க்க

ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்!

ரஷ்யாவுடன் வணிகம் செய்யக்கூடாது. அப்படி வணிகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரி விதிக்கப்படும் என்றும்,ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்பவர்கள் உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறார்க... மேலும் பார்க்க

ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் இயங்கி வந்த பகுதி நேர நியாய விலை கடையை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ரிப்பன் வெட்டி ... மேலும் பார்க்க