24 வருஷமா K. Balachander சாரோட பையனா..! - T. V. Varadarajan Interview | News Rea...
'டைம்' கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் என்ன? | Quick Read
'இன்னும் 10 - 15 நாள்கள்தான் டைம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு காலக்கெடு கொடுத்து அதிர வைத்திருக்கிறார்.
ட்ரம்ப் கூறுவது என்ன?
"10 - 15 நாள்களுக்குள் ஈரான் தனது அணு ஆயுதக் கட்டமைப்பைக் கலைக்க வேண்டும்... அவர்கள் வைத்திருக்கும் யுரேனியத்தை ஏதேனும் ஓர் அணு ஆயுத நாட்டிற்கு வழங்க வேண்டும். இல்லையேல்... அடுத்தது கெட்ட விஷயங்கள்தான் நடக்கும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார், ட்ரம்ப்.
ஒருவேளை ஈரான் இதைச் செய்யவில்லை என்றால், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இது நடந்தால், ஈரான் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. உலக நாடுகளிலும் இதன் எதிரொலி இருக்கும். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
> ஹார்மூஸ் ஜலசந்தி ஈரானுக்கு மிக அருகில் உள்ளது. இதன் வழியாகத் தான் உலகத்தில் பயன்படுத்தப்படும் 20 - 25 சதவிகித எண்ணெய்களும், 20 சதவிகித எல்.என்.ஜிகளும் சென்று வருகின்றன.
ஒருவேளை, ஈரானை அமெரிக்கா தாக்கினால், இந்தப் பாதை பிளாக் செய்யப்படும்.
இதனால், எண்ணெய் மற்றும் எரிவாயுக்களின் விலை தாறுமாறாக எகிறும்.
> உலகத்தில் பதற்றமான சூழல் நிலவும் போது, பங்குச்சந்தையிலும் தாக்கங்கள் எட்டிப்பார்க்கும்.
> இப்போது தங்கம், வெள்ளி விலை ஓரளவு நிதானத்திற்கு வந்துள்ளது. புதிய போர் ஒன்று தொடங்கும்போது, அதன் விலை தாறுமாறாக உயரலாம்.
> போக்குவரத்திற்கு எண்ணெய்கள் மிக முக்கியம். எண்ணெய் கிடைப்பதிலேயே சிக்கல் எழும்போது, அனைத்துப் பொருள்களின் விலையும் எகிறலாம்.
> ஒரு நாட்டில் போர் நடக்கும்போது, அந்த நாட்டு மக்கள் அங்கே இருந்து வெளியேறுவார்கள். இது அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால், பக்கத்து நாடுகள் பாதிக்கப்படும்.
இதை தாண்டியும் நிறைய நிறைய தாக்கங்கள் இருக்கும்.














