செய்திகள் :

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! - AI ஆய்வில் வெளியான அதிர்ச்சி!

post image

நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், அவற்றின் விற்பனை பில்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஹைதராபாத் உணவகத்தால் வெளிவந்த அதிர்ச்சி!

உணவக உரிமையாளர்களின் இந்த மோசடி, ஹைதராபாத் பிரியாணி கடை ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அங்குள்ள பிரபல பிரியாணி கடைக்குச் சென்றனர்.

கடையில் இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விட பில்லிங் சிஸ்டத்தில் அதிக அளவில் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அது பற்றி விசாரித்தனர்.

பிரியாணி
பிரியாணி

சிக்கியது எப்படி?

ஹைதராபாத் பிரியாணி கடையின் பில் விவரங்களை எடுத்துச் சென்று ஆய்வு செய்தபோது, அதில் சில பில்கள் காணாமல் போய் இருந்தது. அவற்றை பிரியாணி உரிமையாளர் சிஸ்டத்தில் இருந்து அகற்றினாரா அல்லது காணாமல் போனதா என்ற சந்தேகம் எழுந்தது. பில்லிங் மென்பொருளில் பதிவாகும் ஒவ்வொரு பில்லும் சிஸ்டத்தில் இருக்கும். அந்த பில்லை அப்புறப்படுத்தினாலும், அந்த பில் இருந்த இடத்தில் ஒரு டிஜிட்டல் மார்க் அடையாளம் இருக்கும்.

ஹைதராபாத் வருமான வரித்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட பிரியாணி கடையின் பில்லிங் மென்பொருளை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்தபோது, அதிக அளவில் பில்கள் சிஸ்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஆய்வில் சிக்கிய ஏராளமான உணவகங்கள்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அகமதாபாத் நிறுவனம் ஒன்றுதான் பில்லிங் மென்பொருளை சப்ளை செய்து இருந்தது. அந்த மென்பொருளை வழங்கிய அகமதாபாத் நிறுவனத்திடம் அனைத்து உணவகங்களின் பில்களும் அவர்களது சிஸ்டத்தில் இருந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து நாடு முழுவதும் உள்ள உணவகங்களின் பில் விவரங்களை வாங்கி முழுமையாக ஆய்வு செய்யத்தொடங்கினர்.

உணவக உரிமையாளர்கள் தங்களது சிஸ்டத்தில் பில்களை அழித்திருந்தாலும் அவை மென்பொருளை வழங்கிய நிறுவனத்திடம் அழியாமல் இருந்தது. எனவே அனைத்து பில் விவரங்களையும் வாங்கிச் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

70,000 கோடி அளவுக்கு மறைக்கப்பட்ட வருமானம்!

இதில் நாடு முழுவது 70 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானத்தை உணவக உரிமையாளர்கள் கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தனர்.

இது குறித்து மூத்த நிதி ஆலோசகர் சர்தக் அஹுஜா கூறுகையில், ''கிளவுட் அடிப்படையிலான அமைப்புகளைக்கூட புலனாய்வாளர்கள் ஆய்வு செய்ய வாய்ப்பு இருப்பதால், டிஜிட்டல் பதிவுகளைத் அழிப்பதது இனி ஒரு பாதுகாப்பான செயல் அல்ல'' என்று எச்சரித்தார். நேரடி வரி விதிப்பு ஆணையம் இப்போது இது தொடர்பான விசாரணையை நாடு முழுவதும் விரிவுபடுத்தி இருக்கிறது. இப்போது ஒவ்வோர் உணவக உரிமையாளர்களும் எந்த அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்து இருக்கின்றனர் என்பது குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதனால் எவ்வளவு வரி மற்றும் அபராதம் விதிக்கப்படுமோ என்ற கலக்கத்தில் உணவக உரிமையாளர்கள் இருக்கின்றனர்.

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு அமெரிக்காவிலிருந்து மிரட்டல் - அனுப்பியது பிஷ்னோய் கூட்டாளி!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஹாரி பாக்ஸர் என்பவன் பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தான். ரன்வீர் சிங்கின் செயலாளருக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ம... மேலும் பார்க்க

`ரூ.70,000 கோடி விற்பனையை மறைத்த பிரியாணி உணவகங்கள்' - ஐதராபாத் கடை ரெய்டு மூலம் அம்பலமான மெகா மோசடி

ஐதராபாத் பிரியானி என்றாலே மிகவும் பிரபலம். நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஐதராபாத் பிரியானி என்ற பெயரில் அதிக அளவில் பிரியானி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி... மேலும் பார்க்க

Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?

ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்' திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவர... மேலும் பார்க்க

பஞ்சாப்: மணமகள் மீது ரூ.8.5 கோடியை மழையாக பொழிந்தார்களா உறவினர்கள்? - வைரல் வீடியோவின் பின்னணி!

திருமணம் என்றாலே உறவினர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. திருமணத்தில் ... மேலும் பார்க்க

ஆப்கன்: எலும்பு முறிய கூடாது, காயம் தெரியகூடாது!- பெண்களை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. படிப்பதற்கு கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக வெளியில் செல்ல... மேலும் பார்க்க

ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த க... மேலும் பார்க்க