செய்திகள் :

"தமிழ்நாட்டில் தொடர் கொலைக்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையேதான் போட்டி" - கனிமொழி விமர்சனம்

post image

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (28). இவர் நேற்று இரவு வீட்டு வாசலில் தாயுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இருவர் அரிவாளால் அஜித்தைச் சாரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதைத் தடுக்க முயன்ற அஜித்தின் தாயாருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அஜித்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டவராக ஹரிஷ் என்பவரைக் கைது செய்திருக்கிறது. மற்றொரு கூட்டாளியான ராஜேஷ் தலைமறைவாக இருக்கிறார். அவரைத் தேடி வருகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தக் கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாகக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மற்றொருபுறம் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலால் கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``தமிழ்நாட்டில் இந்த 5 மாதங்களில் 500 கொலைகள் நடந்ததுதான் தவெகவின் சாதனை. அண்ணன், தம்பி, தாய்மாமன், பெண்களுக்கு பாதுகாவலன் எனப் பேசும் முதல்வர், பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தார்” எனச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டியிருந்தார். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து இதேக் கேள்வியை எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.

முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனி எவரும் வாய் திறக்கக் கூடாது" - டாக்டர் கிருஷ்ணசாமி

"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனிமேல் எவரும் வாய் திறக்காத அளவிற்கு, எங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடக்கும்" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரி... மேலும் பார்க்க

மேகதாது அணை: "தனக்குத் தானே பட்டம் சூட்டி கொண்ட தாய் மாமா என்ன செய்யப் போகிறார்?" - எடப்பாடி காட்டம்

கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கும் படி மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியிருக்கிறார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ச... மேலும் பார்க்க

"அதிமுக-வுக்கு திமுக வாக்கு கேட்கிறது; திமுக-வுக்கு அதிமுக வாக்கு கேட்கிறது" - ஆதவ் அர்ஜுனா சாடல்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு, தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரசாரத்தை முன்னெடுத்த... மேலும் பார்க்க

மின்சாரத்துறையில் தனியார்: ``இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு! " - சீமான் காட்டம்

வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்... மேலும் பார்க்க

’சாதிய வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’–அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் என்பவரின் கையை, ஆறுச்சாமி என்பவர் கடந்த 23ம் தேதியன்று அரிவாளால் வெட்டினார். இதில் அவரது கை துண்டான நிலையில்,... மேலும் பார்க்க

வீரமணி போக்சோ வழக்கு: ``எனக்கும் வீரமணிக்கும் தொடர்பா?" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்!

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு தமிழ்நாட்டில் விவாதமாகியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விசாரணையில் இருக்கும் அவர் மீது, நேற்று மற்றொரு புகாரின் அடிப்படையில் போக்சோ வ... மேலும் பார்க்க