செய்திகள் :

"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" - திமுக எம்.பி. கனிமொழி

post image

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"தூய சக்தி எனக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, தவெக பணப் பட்டுவாடா செய்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது. இவர்களின் உண்மையான முகத்தை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தேர்தலுக்காக அதிகமாகப் பிரசாரம் செய்யாத முதலமைச்சர் தெரு தெருவாகச் சென்று பிரசாரம் செய்கிறார் என்றால் தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

தவெகவுக்குப் பாடம் சொல்லி தரக்கூடிய அளவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அவர்கள் கூட்டணியில் இருப்பவர்களே விமர்சனம் செய்யக்கூடிய அளவுக்குத்தான் இருக்கிறார்கள்.

நாங்கள் எந்தத் தவறும் செய்ய மாட்டோம் என்று மேடைக்கு மேடை பேசினால் மட்டும் போதாது.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

உண்மையிலேயே அப்படி இருக்க வேண்டும். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. பாதுகாப்பு இல்லை. குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.

மக்கள் ஒரு அச்சத்துடன் வாழக்கூடிய சூழல் நிலவுகிறது. வளர்ச்சிக்கானத் திட்டங்கள் எதுவும் கிடையாது" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: இந்தியாவைப் பாராட்டும் புதின்; இந்தியாவின் திட்டத்திற்கு உக்ரைன் 'டிக்'; என்ன நடந்தது?

உலக நாடுகளுக்கு இடையே ‘நடுநிலை’ என்பதற்கு எப்போதுமே இந்தியாவிற்குத் தனிப்பெயருண்டு... சிறப்புண்டு.இது ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சியில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.இந்தியாவின் நிலைப்பாடே ‘... மேலும் பார்க்க

புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" - மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்

புதுச்சேரி சுப்பையா சாலையில் இருக்கிறது தீயணைப்புத் துறையின் தலைமை அலுவலகம். கடற்கரைக்கு அருகிலிருக்கு சாலை என்பதாலும், வார இறுதி நாள் என்பதலும் நேற்று காலை படு பிஸியாக இருந்தது அந்தப் பகுதி. சுமார் 1... மேலும் பார்க்க

CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' - சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி: ஒரு மாத வித்தியாசம்; ஆறு மாதப் போராட்டம் - ஆதார் பிழையால் தவிக்கும் மாணவி!

“ஒரு மாத வித்தியாசம் தான், இதை சரிசெய்ய இவ்வளவு சிரமப்படுவோம்னு நினைக்கவே இல்லை!” என்கிறார் அந்த 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவியின் தாய்.கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி, 8-ம் வகுப்பு வரை தனியார் பள... மேலும் பார்க்க

`டாஸ்மாக்கை அகற்றல... இனி கிராம சபையே நடக்காது!' – புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு?

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகுரும்பத் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, விபத்துக... மேலும் பார்க்க