செய்திகள் :

தர்மேந்திரா காலமானார்; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சிகிச்சை எடுத்தபோது உயிர் பிரிந்தது

post image

கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. டிசம்பர் 8ம் தேதி, அவரது 90வது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இதையடுத்து அவரின் மனைவி ஹேமாமாலினி தன் கணவர் நலமோடு இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், மீடியாக்கள் தவறான செய்தியை பரப்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

தர்மேந்திரா
தர்மேந்திரா

அதோடு கடந்த 12 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் தர்மேந்திரா வீட்டிற்கு வெளியில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அவரது உடல் நிலை இன்று மோசமடைந்தது. அவர் பிற்பகலில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960ம் ஆண்டு தில் பி தேரா ஹம் பி தேரே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தர்மேந்திரா பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக இருந்தார்.

கடைசியாக அவர் தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் அடுத்த மாதம் 25ம் தேதிதான் திரைக்கு வருகிறது.

தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமமாலினி ஆகிய இரு மனைவிகள் மற்றும் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.

Dhurandhar: `அழகே அழகே...' - சாரா அர்ஜுன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara Tendulkar: `சுற்றுலா பிரசாரத்துக்கு ரூ.1140 கோடி' - ஆஸ்திரேலியா பிராண்ட் தூதராக சச்சின் மகள் மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி

நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திரு... மேலும் பார்க்க

``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்

சவூதி அரேபியாவில் தற்போது ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மா... மேலும் பார்க்க

Dharmendra: "இதயம் நொறுங்கிய நிலையில்..." - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்... மேலும் பார்க்க

Aamir Khan: ``அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' - மனம் திறந்த ஆமிர் கான்

ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அத... மேலும் பார்க்க

LK7: "அவர் மும்பைக்கும் வரும்போது நரேஷன்" - லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து ஆமிர் கான்

ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகவு... மேலும் பார்க்க