Radhima: "நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன்!" - சாய் அபயங்கரை பாராட்டிய இயக்கு...
தர சோதனையில் சிக்கிய பெருங்காயம் – Everest, LG-க்கு தடை: தர நிர்ணய ஆணையம் அதிரடி
தரநிலைகளை பூர்த்தி செய்யாத பெருங்காயப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி Everest மற்றும் LG நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தடை விதித்துள்ளது.
FSSAI நடத்திய சோதனையில், இந்த நிறுவனங்களின் சில பெருங்காயப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப இல்லை என்பது கண்டறியப்பட்டது.
பெருங்காயத்தின் தரத்தை அறிய பயன்படுத்தப்படும் முக்கிய அளவுகளில் ஒன்று ஆல்கஹாலில் கரையும் சாறு (Alcohol-soluble extract) ஆகும். பெருங்காயத்தில் இது குறைந்தது 5% இருக்க வேண்டும். ஆனால் சோதனை செய்யப்பட்ட சில Everest பெருங்காயப் பொருட்களில் இந்த அளவு 5%-க்கும் குறைவாக இருந்தது.
அதாவது, பெருங்காயத்தில் ஆல்கஹாலில் கரையக்கூடிய பொருட்கள் எவ்வளவு உள்ளன என்பதை ஆய்வகத்தில் கணக்கிடுவதாகும். FSSAI விதிப்படி இது குறைந்தது 5% இருக்க வேண்டும். ஆனால் Everest-ன் சில மாதிரிகளில் இந்த அளவு 5%-க்கும் குறைவாக இருந்தது.
மேலும், சில பொருட்களின் லேபிள்களில்(labelling) தேவையான தகவல்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை என்றும் FSSAI தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை சரிசெய்யும் நடவடிக்கைத் திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று FSSAI உத்தரவிட்டுள்ளது. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















