செய்திகள் :

'தலித் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்ததில்லையா?' - பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு ராஜ்மோகனின் பதில் என்ன?

post image

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வைத் தடை செய்யக் கோரியும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக கடந்த ஜூலை 23-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ”தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.

பா. ரஞ்சித்
பா. ரஞ்சித்

ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இன்று வரை ஏன் எந்தத் தலித் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? அமைச்சர் ராஜ்மோகன் எழும்பூரில் நின்றபோதுதான் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்குத் தெரிந்தது.

ஒரு பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்னைக்குக் கூட குரல் கொடுத்ததில்லை அவர்” என ஆவேசமாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் நேற்று ( ஜூலை. 25) புதுச்சேரியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் பா.ரஞ்சித் பேசியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

ராஜ்மோகன்
ராஜ்மோகன்

அதற்கு பதிலளித்த அவர், "பதிலுக்குப் பதில் சொன்னால் நன்றாக இருக்காது. நமக்குள் சண்டைப் போட்டுக் கொண்டால் கூட்டத்தின் நோக்கம் சிதைந்து போய்விடும். அவர் நடத்தியது நீட்டிற்கு எதிரான கூட்டம்தான். ரஞ்சித் அவர்களின் நம்பிக்கை வெல்லும்படி வேலை செய்துக்காட்டுவதுதான் இதற்கான பதில்" என்று கூறியிருக்கிறார்.

"தர்மேந்திர பிரதான் தேசியக் கல்விக் கொள்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்" - பிரகலாத் ஜோஷி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் த... மேலும் பார்க்க

Pralhad Joshi: RSS பின்புலம்; பல முறை எம்.பி; கல்வித்துறைக்குப் பொறுப்பேற்கும் பிரகலாத் ஜோஷி யார்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியி... மேலும் பார்க்க

ராமதாஸ் பேரனுக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு? - தமிழ்நாட்டில் கால்பதிக்கும் என்.ஆர் காங்கிரஸ்?

புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) கட்சியின் நிறுவனருமான என். ரங்கசாமி, தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழ்நாட்டில் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கத் திட்டமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி, குத்த... மேலும் பார்க்க

’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

கோவை வ.உ.சி மைதானம் அருகில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், கபடி உள் விளையாட்டு அரங்கம், வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பிற்படுத்தபட்ட... மேலும் பார்க்க