செய்திகள் :

"தர்மேந்திர பிரதான் தேசியக் கல்விக் கொள்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்" - பிரகலாத் ஜோஷி

post image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், மத்திய உணவு வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

இந்நிலையில் புதிதாக கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"மத்திய கல்வித் துறை அமைச்சர் பொறுப்பைத் தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியா கல்வித்துறையில் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாகச் செயல்படுவேன்.

பிரதமர் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய ஒரு முக்கிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். நான் நேர்மையாகப் பணியாற்றி இந்தத் துறையில் அவரது எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் தர்மேந்திர பிரதானும் புதிய தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினார். புதிய கல்வி முறையில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று பேசியிருக்கிறார்.

Pralhad Joshi: RSS பின்புலம்; பல முறை எம்.பி; கல்வித்துறைக்குப் பொறுப்பேற்கும் பிரகலாத் ஜோஷி யார்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியி... மேலும் பார்க்க

'தலித் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்ததில்லையா?' - பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு ராஜ்மோகனின் பதில் என்ன?

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வைத் தடை செய்யக் கோரியும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக கடந்த ஜூலை 23-ம் தேதி சென்னையில் போராட்டம் நடை... மேலும் பார்க்க

ராமதாஸ் பேரனுக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு? - தமிழ்நாட்டில் கால்பதிக்கும் என்.ஆர் காங்கிரஸ்?

புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) கட்சியின் நிறுவனருமான என். ரங்கசாமி, தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழ்நாட்டில் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கத் திட்டமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி, குத்த... மேலும் பார்க்க

’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

கோவை வ.உ.சி மைதானம் அருகில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், கபடி உள் விளையாட்டு அரங்கம், வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பிற்படுத்தபட்ட... மேலும் பார்க்க