செய்திகள் :

’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்!

post image

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இருக்கின்றன. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்தால்தான், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதி பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது மக்களுக்கு தெரியவரும். சில அமைச்சர்கள் மட்டுமே கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். அந்தந்த துறைகளுக்கான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டும்.

சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துகிறார். அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார் போல தெரிகிறது. சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாட்களே ஆகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாக சீர்கேட்டின் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திற்கு ஏற்கனவே அதிக அளவில் கடன் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இதுபோன்று தொடர்ச்சியான இலவச திட்டங்களை அறிவிக்கவில்லை. தேவையான ஒரு பகுதியை மட்டுமே அறிவித்தோம். தற்போதைய அரசு தொடர்ந்து செலவினங்களை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வருகிறது. அதனை சமாளிக்க தொடர் வருவாய் இருக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகிறது. சோதனை நடைபெற்ற இடங்களிலேயே இவ்வளவு பணம் சிக்குகிறது என்றால், சோதனை நடைபெறாத இடங்களில் எவ்வளவு இருக்கும்? தமிழகம் முழுவதும் ஊழல் நடைபெற்று வருகிறது.

தற்போதைய ஆட்சியில் எங்காவது சோதனை நடைபெற்றால், அதனை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு விளம்பரப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி, ரீல்ஸ் போட்டு வண்டி ஓட்டுகிறார்கள். ரியல் ஏதும் இல்லை. முதலமைச்சர் விஜய் காஸ்ட்லி முதலமைச்சர். நாங்கள் விவசாயி. எனது நிலை வேறு, அவரது நிலை வேறு.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம். அது அவருடைய விருப்பம். சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு எதையும் செய்யலாம், ஆனால் வடமாநிலங்களில் அது நடக்காது. தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது அவர்களது செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது. ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களிலேயே பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருவாயை பெருக்குவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. இவற்றை வைத்து பார்க்கும்போது இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றார்.

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க