பாஜக கூட்டம், புறக்கணித்த அண்ணாமலை டு திமுக-வை நெருங்கும் ராமதாஸ்; டென்ஷனில் அன...
தவெக கூட்டணி: "ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் பேசுவது உண்மைதான்" - சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில், பெரும்பாலானோர் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

அந்தக் கருத்தின் அடிப்படையில் இரண்டு நாள்களில் நல்ல முடிவு எடுப்பதாகப் பேசியுள்ளார். அவர் விரைவில் நல்ல முடிவுகளை எடுப்பார். இணைய வேண்டிய நேரத்தில் இணைவோம்.
பொங்கல் முடிந்த பிறகு ஒரு திருப்புமுனையைப் பார்க்கலாம். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் என்று பலமுறை சொல்லியுள்ளோம். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் என ஒவ்வொருவரும், ஒவ்வொருவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான்.

அதே நேரத்தில் அவர்கள் எப்போது முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. தவெகவில் என்னைப் போன்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியைப் போல விஜய்யுடன் பயணிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. புரட்சித் தலைவர் கட்சி தொடங்கிய போது, எப்படி மக்கள் அலை வந்ததோ, அதைப் போன்ற அலை இவருக்கும் வருகிறது. இவர் எதிர்காலத் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்
விஜய்யின் மலேசியா நிகழ்ச்சிக்குப் பிறகு, அவரின் தமிழ்நாடுச் சுற்றுப்பயணம் முடிவு செய்யப்படும். கொங்கு மண்டலத்தில் திமுக அதிக கவனம் செலுத்தினாலும், அந்தப் பகுதியில் தவெக வெற்றி வாகை சூடும்" என்றார்.















