செய்திகள் :

திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவுகள்; பின்னணி என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குடிநீர் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளது. மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட மாணவர்கள் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

தொட்டிக்குள் கிடந்த பேப்பர்
தொட்டிக்குள் கிடந்த பேப்பர்

உடனே ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்த வடமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

குடிநீர் தொட்டிக்குள் கிடந்த பேப்பர் நனைந்திருந்ததால் அதில் இருந்த எழுத்துகள் படிக்க முடியாத அளவிற்கு அழிந்து போயிருந்தன.

பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க