செய்திகள் :

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

post image

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.

இவர்களின் உறவினரின் குழந்தைகள் அவருடன் சென்று சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில், நாகராஜ் மகள்கள் ​யோகவர்ஷினி (11), அனன்யா (6) (இருவரும் சகோதரிகள்), ஜெகதீசன் மகள் தனுஸ்ரீ (5), சின்னதம்பி மகள் ​மோசிகரன் (6) ஆகிய நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பால் வண்டி ஓட்டுநர் சரவணன்
பால் வண்டி ஓட்டுநர் சரவணன்

இதைக் கண்ட ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். ​விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீஸார் நான்கு சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் சரவணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஒரே விபத்தில் சகோதரிகள் உள்ளிட்ட நான்கு சிறுமிகள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க