செய்திகள் :

திமுக ட்விஸ்ட் - உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் - 'துரோகி...' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார்

post image

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலால் கைவிடப்பட்டிருந்த தி.மு.க மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. 'சீனியர்களை ஓரம்கட்டும் முடிவிலிருந்து பின்வாங்க வேண்டும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர்கள் சிலர் நெருக்கடி கொடுத்த நிலையிலும், அதனை மறுத்திருக்கிறார் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அதேநேரம், 'கூட்டணிக் கணக்குகள் மாறிவிட்டதால் ஓ.பி.சி சமூக மக்களின் ஆதரவு நம் பக்கம் திரும்பியிருக்கிறது. பட்டியல் சமூக, இஸ்லாமிய வாக்குகளும் நமக்கு கிடைத்து வருகின்றன. இந்நிலையில் மறுசீ்ரமைப்பு என்கிற பெயரில் உட்கட்சி பிரச்னைகளை திரையிட வேண்டாம்.

ஆகையால் மாவட்டச் செயலாளர் தேர்தலை மட்டுமாவது ரத்து செய்துவிடுங்கள். சமூக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றால் நியமனம்தான் ஒரே வழி...' என சீனியர்கள் எடுத்துச் சொல்ல, 'மாவட்டச் செயலாளர் தேர்தல் ரத்து' முடிவுக்கு மட்டும் ஓகே சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்!

இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், அ.தி.மு.க-வுக்குள் மீண்டும் கலகம் வெடித்திருக்கிறது. 'தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும்' என விரும்புகிறார்கள் வேலுமணி, சி.வி சண்முகம் அண்ட் கோ.

விஜய் - எஸ்.பி.வேலுமணி
விஜய் - எஸ்.பி.வேலுமணி

இதற்கிடையே, 'மேலும் 15 பேர் அ.தி.மு.க-விலிருந்து வர இருக்கிறார்கள்' என திரிக் கொளுத்தினார் அமைச்சர் செங்கோட்டையன். இன்னொரு பக்கம், 'எடப்பாடி பழனிசாமியே த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க தயாராகிவிட்டார்' எனச் செய்திகள் பரவின. ஆனால், இரண்டு தரப்புமே த.வெ.க-வுடன் இணைக்கமாக செல்ல விரும்பவில்லை என்கிறார்கள் இலைக்கட்சி வட்டாரத்தினர்.

'அமைச்சரவையில் இடம் தருகிறோம் எனச் சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க வைத்துவிட்டு கைக்கழுவிட்டது த.வெ.க. எனவே மீண்டும் த.வெ.க-வை நம்ப முடியாது' என்றுவிட்டாராம் சி.வி.சண்முகம். ஆகையால், அவர்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் 'ஜெம்' வீரமணிக்கு சிறையில் ஏதாவது சலுகைகள் வழங்கப்படுகிறதா என உன்னிப்பாக கவனிக்கிறதாம் உளவுத்துறை. சிறையில் அவரை யார், யார் சந்திக்க வருகிறார்கள் என்பதையும் உளவுத்துறை நோட் போட்டு வருகிறதாம். அதனால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வீரமணியின் பிளாக் பக்கத்தில் கூட செல்ல சிறை காவலர்கள் முதல் ஆபீஸர்கள் வரை தயக்கம் காட்டுகிறார்களாம்.

ஜெம் வீரமணி
ஜெம் வீரமணி

சிறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் வீரமணி, ஆங்கில நாளிதழ்களை மட்டும் படிக்கிறாராம். மேலும், யாரிடமும் சகஜமாக அவர் பேசுவதில்லையாம். தன்னைச் சந்திக்க வரும் வழக்கறிஞர்கள் டீமிடமும் உறவினர்களிடமும் ஜாமீன் எப்போது கிடைக்கும் என்று கேட்கிறாராம். அவரின் மருத்துவ தேவையை சுட்டிக்காட்டி ஜாமீன் வாங்க அவரின் சட்ட நிபுணர்கள் குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

'காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம் உதயநிதி. ஆகவே,'தமிழ்தேசிய அரசியல் திராவிட அரசியலுக்கு எதிரானது அல்ல' என்ற பிரசாரத்தை முன்னெடுத்து, காங்கிரஸை அட்டாக் செய்ய ஆயத்தமாகிறாராம்.

மறுபக்கம், 'நம்பிக்கை துரோகி காங்கிரஸ்' என டெல்லி தலைகளையும் அட்டாக் செய்யும் திட்டமும் தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான், காக்ரோஜ் ஜனதா பார்ட்டி நிர்வாகிகள் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, 'சட்ட ரீதியாக தி.மு.க உங்களுக்கு துணை நிற்கும்' என ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார் ஸ்டாலின். 'இந்தியா' கூட்டணியிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கனிமொழி தொடர்ந்து பேசி வருவதால், 'நம் கூட்டணியை தி.மு.க உடைத்துவிடுமோ' என்ற அச்சம் காங்கிரஸுக்கு வரத் தொடங்கிவிட்டது!

அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் உட்கட்சி பஞ்சாயத்தை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். இடைத்தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு வேலுமணியிடம் பேசியிருப்பவர், 'அவசரப்பட்டு த.வெ.க அரசாங்கத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்துவிடாதீர்கள். கட்சியை மறுசீரமைக்கும் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்' என்றிருக்கிறாராம்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.டி.தினகரன்

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை அரவணைத்து ஒருங்கிணைக்கும் முயற்சியாக, தினகரனையும் அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது வேலுமணி டீம். அதுதொடர்பாக பேச்சு எழுந்தபோது, 'நடப்பது நடக்கட்டும். என்னைப் பற்றி யோசிக்காமல் கட்சியை மீட்டெடுக்கும் வழியை யோசியுங்கள்' என்று ஆலோசனை அளித்திருக்கிறார் தினகரன். 'எந்தப் பக்கம் பா.ஜ.க சாய்கிறது, யார் பலம் பெறுகிறார்கள் என்பதை கணக்குப் போடாமல் குருட்டாம் போக்கில் ஒரு பக்கம் சைடு எடுக்க தினகரன் விரும்பவில்லை' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'ஸ்டாலின் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார், தொகுதி மாறி நிற்கச் சொல்லி அப்போதே.!'- திருமாவளவன்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்திய கூட்டணி சார்பில் சென்னையில் இன்று (அக்.15) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திரு... மேலும் பார்க்க

ரஷ்யப் போரில் உக்ரைனை ஆபத்தில் தள்ளியதா Starlink? உக்ரைனின் குற்றச்சாட்டும் SpaceX நடவடிக்கையும்!

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளின் வேகத்தைக் குறைத்து உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது உக்ரைன் அரசு.உக்ரைனுக்கு என்ன பாதிப்பு? இதுவரை வெளியாகி... மேலும் பார்க்க

'லண்டன், ஆந்திரா போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க.!'- முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய்,... மேலும் பார்க்க

மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் - நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் சமீபத்தில் மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்தில் தனது காதலியுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இம்ரான்... மேலும் பார்க்க

'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்

காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும... மேலும் பார்க்க