செய்திகள் :

திருச்சி: தாய், சேய்க்கு HIV ரத்தம்; ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

post image

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரசவத்துக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த 2022 - ம் வருடம் சேர்ந்தார். அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

பின்னர், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரூ. 20 லட்சம் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தைத் தானமாக வழங்கியவரிடம் ரத்த தானம் செய்யப்பட்டபோது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.

அந்த ரத்தத்தால் மனுதாரரும் அவரது குழந்தையும் ஹெச்.ஐ.வி தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ரத்தத்தில் 'விண்டோ பீரியட்' காலத்தில் இருக்கும் தொற்றுகளைக் கண்டறியும் அறிவியல் முறைகளோ அல்லது அமைப்போ இல்லை. 

hospital

இந்நிலையில், இழப்பீட்டு தொகையைத் தாமாக முன்வந்து உயர்த்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் பரதன், கூடுதல் அரசு வழக்கறிஞர் பார்த்தீபன் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மனுதாரருக்கும், அவரது குழந்தைக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஏற்கெனவே வழங்கிய ரூ. 2.50 லட்சம் போக மீதமுள்ள ரூ. 37.50 லட்சத்தில் ரூ. 17.50 லட்சத்தை 2 வாரத்திலும், ரூ. 20 லட்சத்தை 4 வாரத்திலும் வழங்கவும் உத்தரவிட்டார்.

அதோடு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அவருக்கு உதவியவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டுகிறது எனக் குறிப்பிட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

17 வயது மாணவி கர்ப்பம்; இளைஞர் தலைமறைவு; கருவைக் கலைத்த மருத்துவர்கள் கைது; பகீர் பின்னணி

கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ்(26). இவருக்கு திருமணம் ஆகி அனிதா ரோஸ் என்ற மனைவி உள்ளார். தனேஷின் வீட்டுக்கு அருகே வசிக்கும் 17 வயது சிறுமி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.... மேலும் பார்க்க

பட்டியல் சாதியினரின் உடல் பொது சுடுகாட்டில் அடக்கம்; வாழ்வாதாரத்தை முடக்கி வஞ்சிக்கும் ஆதிக்கச்சாதி?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள பெரும்பாளி பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களில் பலர் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். ஆதிக்கச் ச... மேலும் பார்க்க

தமிழக போலீசாரை மிரள வைத்த ஏடிஎம் கொள்ளை: `திருடர் பயிற்சிப் பள்ளி’ நடத்திய கும்பல் சிக்கியது எப்படி?

நள்ளிரவு நேரம்... ஆள் நடமாட்டமற்ற அமைதியான சாலைகள்... கண்ணிமைக்கும் சில நிமிடங்களில் ஏடிஎம் மையங்களுக்குள் நுழையும் மர்ம நபர்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் பல லட்சம் ரூபாய்களோடு மாயமாகி விடுகிறார்கள... மேலும் பார்க்க

வேலூர்: பாலியல் தொழிலில் பணத்தகராறு; சக புரோக்கரைக் கொன்று புதைத்த கும்பல்; சிக்கியது எப்படி?

வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள அம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 33). இவர், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி மாயமானார். இது குறித்... மேலும் பார்க்க

ஊத்தங்கரை எம்.எல்.ஏ நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைத் தொகுதியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பொறுப்பு அமைச்சர் கீர்த்தனாவின் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஊத்தங்கரையிலுள்ள தவெக எம்.எல்.ஏ இளையராஜா வீட்டில் க... மேலும் பார்க்க

கரூர்: சொத்துவரி மதிப்பை குறைத்து மதிப்பிட ரூ.3,000 லஞ்சம்; மாநகராட்சி வரி ஆய்வாளர் அதிரடி கைது!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகத்தில் வரி ஆய்வாளராக(பில்கலெக்டர்) பணியாற்றுபவர் யோகேஸ்வரன்(வயது: 35). இவரிடம் காந்திகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய வீடு கட்டி வருவதாகக் கூறி, வீட்டி... மேலும் பார்க்க