'முதல்வர் விஜய்-ன் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?'- துரைமுருகன் க...
கரூர்: சொத்துவரி மதிப்பை குறைத்து மதிப்பிட ரூ.3,000 லஞ்சம்; மாநகராட்சி வரி ஆய்வாளர் அதிரடி கைது!
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகத்தில் வரி ஆய்வாளராக(பில்கலெக்டர்) பணியாற்றுபவர் யோகேஸ்வரன்(வயது: 35). இவரிடம் காந்திகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய வீடு கட்டி வருவதாகக் கூறி, வீட்டிற்கான சொத்து வரி மதிப்பு கேட்டு கடந்த வாரம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, சொத்து வரி மதிப்பை குறைத்து தருவதாகவும், அதற்கு ரூ.3,000 லஞ்சம் தரவேண்டும் என அவரிடம் யோகேஸ்வரன் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்காத அவரிடம், 'காசு கொடுக்கவில்லை என்றால், வேலை நடக்காது' என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் பாதிக்கப்பட்ட நபர் புகார் செய்துள்ளார். அப்போது, போலீஸார் ரசாயனம் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து, யோகேஸ்வரனிடம் லஞ்சப்பணம் ரூ.3,000-த்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜான் தலைமையிலான போலீஸார் யோகேஸ்வரனை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர், அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துவரி மதிப்பை குறைத்து மதிப்பிட லஞ்சம் கேட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.














.jpeg)


