செய்திகள் :

திருச்சி: வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி; போலி SMS-ஐ நம்பி லட்சங்களைப் பறிகொடுத்த பரிதாபம்

post image

திருச்சி, வயலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோ பிராங்க் சுரேந்திரன். இவர், பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வயலூர் ரோடு பகுதியிலுள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து உள்ளார்.

பிறகு, இவருடைய செல்போனில் வாட்ஸ் அப் மூலம் பணம் எடுத்ததற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதில், அவர் ஆம் என்று திரும்பி பதிலளித்தார். பிறகு, சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்திரன் உடனடியாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தார்.

trichy

அந்தப் புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆன்லைனில் ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணத்தை மோசடி செய்து எடுத்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர். ஏ.டி.எம்-மில் பணம் எடுத்த உடன் எந்த வங்கியிலும் பணம் எடுத்தீர்களா என மெசேஜ் அதேபோன்று கிரெடிட் கார்டு முலம் பொருட்கள்  வாங்கிய பின் உங்கள் கிரெடிட் லிமிட் உயர்த்த வேண்டுமா உடனே என மெசேஜ் வந்தாலும் இந்த மெசேஜ்க்கு ஆம் இல்லை என்று பதில் அளித்து நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாக்கு மட்டை தயாரிக்கும் வியாபாரியிடம் பல லட்சம் முறைகேடு செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியாத்தம்: திருமணம் மீறிய உறவில் திடீர் விரிசல்; காதலன் அடித்துக் கொலை; 4 பெண்களிடம் விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது 40). திருமணமாகாதவர். அம்பேத்கர் நகருக்கு அருகிலுள்ள அருணாச்சல நகர் பகுதியில் வசிக்கும் 35 வயதான வேறொருவரின் மனைவ... மேலும் பார்க்க

காதலனோடு சேர்ந்து கணவனை கொன்று டிரம்மில் வைத்து மூடிய மனைவி - மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆண்டு நடந்த டிரம் படுகொலை நாடு முழுவதும் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. கப்பலில் வேலை செய்த கணவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது அவரை காதலன் துணையோடு கொ... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவிலும் சந்தேகம்; கொன்று புதைக்கப்பட்ட பெண்! - தருமபுரி அதிர்ச்சி

தருமபுரி மாவட்டம் கடத்தூர்... அக்டோபர் 12-ஆம் தேதி காலை... கடத்தூர் 4-வது வார்டு குடியிருப்புவாசிகள் தங்கள் அன்றாட பணிகளுக்காக அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தபோது அத்தெருவில் காலியான இடத்திலிருந்து த... மேலும் பார்க்க

கேரள யூத வழிபாட்டுத் தலத்திற்கு தீ வைப்பு; ஒருவர் கைது; பாகிஸ்தான் 'பாஸ்' குறித்து என்.ஐ.ஏ விசாரணை!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான கடவும்பாகம் யூத வழிபாட்டுத் தலத்தின் நுழைவு வாயில் அருகே, கடந்த 12-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் காரில் வந்த நபர் ஒருவர் அ... மேலும் பார்க்க

'கூடத்தில் தறவாட்டில் 7 மர்ம மரணங்கள்' - பல கோடி ரூபாய் சொத்துக்காகக் கொடூரக் கொலை; காரியஸ்தர் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியில் கூடத்தில் தறவாடு என அழைக்கப்படும் உமா மந்திரம் வீடு அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பாரம்பர்ய கேரள பாரம்பர்ய நாலுகெட்டு ஓட்டுவீடு இது. வீடு மட்டுமே... மேலும் பார்க்க

உபி: பண்ணை வீட்டில் ஓய்வெடுத்த பாஜக தலைவரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த ரமேஷ் யாதவ் என்பவர் சமீபத்தில் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். பதவி கிடைத்தவுடன் ரமேஷ் கட்சி அலுவலகத்திற்கு சென்று புதி... மேலும் பார்க்க