செய்திகள் :

'தாமரை இலை மேல் தண்ணீர் போல...' - பட்டும் படாமல் SIR போராட்டத்தில் கலந்துகொண்ட தவெக?

post image

சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் SIR க்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராட்டம் நடத்தியிருந்தனர். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சியினரோடு ஆளுங்கட்சியான தவெகவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது. ஆனால், மற்ற கட்சியினரை போல தீவிரமாக இல்லாமல் மேம்போக்காக 'தாமரை இலை மேல் தண்ணீராக...' தவெக இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக மற்ற கட்சிகளின் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சி, மாணவ அமைப்புகள், இந்தியா கூட்டணி கட்சியினர் என பல தரப்பினரும் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராடி கைதாகியிருக்கின்றனர்.

அதேநேரத்தில் காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் தவெக இந்த விவகாரத்தில் மேலோட்டமாகவே பேசியிருந்தது. `தேர்தலுக்கு முன்பாக என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' எனப் பேசினர் ஒழிய, ஞானேஷ் குமார் பற்றி எதுவும் பேசவில்லை இதனால் தவெக மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் எழும்பூரில் ஞானேஷ் பதவி விலக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. தவெக சார்பில் அமைச்சர் ராஜ் மோகன் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்று காலை அந்த ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆனால், தவெக இந்த ஆர்ப்பாட்டத்தை அணுகிய விதம் மேம்போக்காக இருந்தது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் வருத்தப்படுகின்றனர். இதுதொடர்பாக நம்மிடைய இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் சிலர், 'டெல்லியில் போராட்டம் பற்றியெறிந்துக் கொண்டிருந்த போது தவெக அழுத்தமாக எந்த கருத்தையும் சொல்லாமல் நழுவியது. அதுவே எங்களுக்கெல்லாம் அதிருப்தியாக இருந்தது. நாம் நடத்துகிற போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தப் போராட்டத்திலாவது தங்களின் எதிர்ப்பை தீவிரமாக வெளிக்காட்டுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன் ஒரு இடத்தில்கூட பாஜக என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனப் பேசவில்லை. மேலோட்டமாக தாமரை இலை மேல் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் 'SIR யை வலுவாக எதிர்க்கிறோம்' என்று மட்டும் பேசிவிட்டு நழுவிவிட்டார். போராட்டத்துக்கு மற்ற கட்சியின் தொண்டர்கள் கொடியோடு கூடியிருந்தனர். ஆனால், தவெகவின் தொண்டர்களையோ கொடியையோ கூட்டத்தில் காணவே முடியவில்லை. மேடையில் பெயருக்கு இரண்டு பேரை கொடியை பிடிக்க வைத்து நிற்க வைத்தார்கள், அவ்வளவுதான். தலைமையின் உத்தரவில்லாமல் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்திருக்க மாட்டார்கள். தவெக என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்றே புரியவில்லை. பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என போடும் வேடம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது' என்றனர்.

'ஸ்டாலின் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார், தொகுதி மாறி நிற்கச் சொல்லி அப்போதே.!'- திருமாவளவன்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்திய கூட்டணி சார்பில் சென்னையில் இன்று (அக்.15) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திரு... மேலும் பார்க்க

ரஷ்யப் போரில் உக்ரைனை ஆபத்தில் தள்ளியதா Starlink? உக்ரைனின் குற்றச்சாட்டும் SpaceX நடவடிக்கையும்!

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளின் வேகத்தைக் குறைத்து உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது உக்ரைன் அரசு.உக்ரைனுக்கு என்ன பாதிப்பு? இதுவரை வெளியாகி... மேலும் பார்க்க

'லண்டன், ஆந்திரா போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க.!'- முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய்,... மேலும் பார்க்க

மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் - நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் சமீபத்தில் மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்தில் தனது காதலியுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இம்ரான்... மேலும் பார்க்க

திமுக ட்விஸ்ட் - உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் - 'துரோகி...' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார்

தி.மு.க மறுசீரமைப்பில் ட்விஸ்ட்!மாவட்டச் செயலாளர் தேர்தல் ரத்துமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலால் கைவிடப்பட்டிருந்த தி.மு.க மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. 'சீன... மேலும் பார்க்க