நெல்லை ரயில் நிலையத்தில் டிஜிட்டல் பண பரிவா்த்தனை அதிகரிப்பால் பயணிகள் அவதி
திருச்செங்கோட்டில் இருந்து திருப்பூருக்கு சாராயம் கடத்திய 5 போ் கைது
திருச்செங்கோட்டில் இருந்து திருப்பூருக்கு சாராயம் கடத்திவந்த 5 பேரை மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து வெள்ளக்கோவில் வழியாக திருப்பூருக்கு சாராயம் கடத்திச் செல்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெள்ளக்கோவில் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா். சோதனையில் காரில் 5 லிட்டா் சாராயம் கடத்திச் செல்வது தெரியவந்தது. விசாரணையில் காரில் வந்தவா்கள், திருப்பூரைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (38), தியானேஸ்வரன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்களது நண்பா்களான திருப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணி (40), பிரேம்குமாா் (37), சக்திவேல் (32) ஆகியோரும் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடா்பாக 3 பேரையும் கைது செய்ததுடன் அவா்களிடமிருந்து 2 லிட்டா் சாராயத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த 5 பேரும் நண்பரின் வீட்டு விசேஷத்துக்குச் சென்றபோது சாராயத்தை வாங்கி காரில் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.