Shriram Finance-ல் Japan நிறுவன முதலீடு, ஏன்? | Silver Gold | IPS Finance - 392
Sirai: "கதையை எப்படி பிடிக்கணும்னு வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்!" - இயக்குநர் தமிழ்
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இயக்குநர் மற்றும் நடிகர் தமிழ் பேசுகையில், "முதலில், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்தான் என்னை தயாரிப்பாளர் லலித் சார் சந்திக்க விரும்புறார்னு சொன்னாரு. பிறகு, நானும் அவரை மீட் பண்ணப் போனேன்.
அப்போ நான் கதை சொல்லணும்னு எந்த நோக்கத்திலும் போகல. லலித் சார் என்கிட்ட 'விசாரணை மாதிரி ஒரு படம் பண்ணனும்'னு சொன்னாரு. அவர் நினைச்சிருந்தால் அவருடைய மகனை வேறு மாதிரியான வகையில சினிமாவுல அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
ஆனா, அவர் கன்டென்ட் உள்ள படத்தை செய்ய விரும்பினார். பிறகு என்கிட்ட இருந்த ஒரு கதையைச் சொன்னேன். உடனடியாக இந்தப் படத்தை பண்ணலாம்னு சொல்லிட்டாரு.
அப்போதுதான் இயக்குநராக சுரேஷ் சார் வந்தாரு. அவர் வெற்றிமாறன் சார்கிட்ட இருந்து வந்தவர்னு உடனே அவரை இயக்குநராக ஓகே செய்திட்டாங்க.
நான் எழுதிய கதையை படமாக எடுத்து என்னை கண்கலங்க வச்சிட்டார் இயக்குநர் சுரேஷ். ஒரு கதையை எப்படி பிடிக்கணும்னு நான் வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்.
'விசாரணை' படத்தோட டப்பிங் நடந்துட்டு இருக்கும்போது வெற்றி அண்ணன் என்கிட்ட 'என்னடா என்னப் பண்ணப் போற? எதுவும் கதை வச்சிருக்கியா'னு கேட்டாரு.

நானும் அப்போ மாஸாக ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் சொன்னேன். அதைக் கேட்டவர் சிரிச்சிட்டு 'உன்னுடைய பலமே போலீஸ்தான். போலீஸ் சார்ந்து இதுவரை யாரும் பேசாத ஒரு கன்டென்ட் பண்ணு'னு சொன்னாரு.
அன்னைக்கு எழுதத் தொடங்கின கதைதான் 'டாணாக்காரன்'. இந்தப் படத்தைப் பார்த்துட்டு நான் என் மனைவிகிட்ட 'நான் இந்தப் படத்தைப் பண்ணியிருந்தால்கூட இந்தளவுக்கு நான் செய்திருப்பேனான்னு தெரில.
நான் நிறைய லாஜிக் பார்ப்பேன். ஆனா, சுரேஷ் ரொம்ப அற்புதமாக பண்ணியிருக்காரு.'னு சொன்னேன்." எனப் பேசினார்.

















