செய்திகள் :

சேலம் : சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - பெருமூச்சுவிட்ட வாகன ஓட்டிகள்!

post image

சேலம் மாவட்டம் சேலம் - பெங்களூர்‌ தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் பிரிவு மற்றும் ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தின் கீழ் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக விபத்து ஏற்படுவதற்கான அபாயம் இருந்த நிலையில், அதனை சுட்டிக்காட்டி விகடன் செய்தியாக வெளியிட்டது.

இதன் விளைவாக, முதற்கட்டமாக அதிக பாதிப்பு இருக்கக்கூடிய குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டது. காமாலாபுரம் பிரிவு மேம்பால பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து 19.12. 2025 அன்று ஆர்.சி. செட்டிப்பட்டி மேம்பால பகுதியில் இரண்டாம் கட்டமாக தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் பேசும் போது,

"மேம்பாலம் கட்டுவதற்கு முன்பிருந்த பழுதான சாலை வழியே தான்‌ நாங்கள் பயணிக்க வேண்டிய நிலை இருந்ததால் தினமும் விபத்திற்கான அபாயமும், அச்சமும் இருந்துக்கொண்டே இருந்தது. ஆனால், விகடன் செய்தி விளைவாக சரி செய்யப்பட்டிருக்கிறது. எங்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தனர்.

அந்தப்பகுதியில் வசிக்கும் ஒருவர் நம்மிடம் பேசும் போது,

"சாலைக்கு அருகில் குடியிருக்கும் நாங்கள் அடிக்கடி குண்டும் குழியுமான சாலையில் பயணிக்கும் வாகனங்களினால் எங்கள் மீது சிறுசிறு கற்கள் சிதரடிக்கப்படும். இனி அதுகுறித்து பயப்படத் தேவையில்லை " என்று கூறினார்.

இது குறித்து துணை பொது மேலாளர் நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனரிடம் பேசிய போது, " விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்தல் மற்றும் மக்கள் பாதுகாப்பு முதன்மையானது. எனவே விகடன் வெளியிட்ட செய்தி அடிப்படையில், அதற்கான பொறுப்பு அலுவலர்கள் வழி சாலை சீரமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

"தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசுக்கு? ஏன் தவிர்த்தீர்கள்?" - சீமான் காட்டம்

தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

SIR: `இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று திமுக-காரர்களாகி விடுகிறார்கள்!' - இபிஎஸ்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தவெக விருப்பப்பட்டால் பாஜக கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

பெருநிறுவனங்கள் பாஜகவிற்கு வழங்கிய ரூ.3,112 கோடி; யார் கொடுத்தார்கள்? காங்கிரஸிற்கு எவ்வளவு?

தேர்தல் பத்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று கடந்த ஆண்டு அந்தப் பத்திரங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதனால், பெரு நிறுவனங்கள் தற்போது அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் அறக்கட்டளைகள் (... மேலும் பார்க்க

`சித்ரவதை, தற்கொலை முயற்சி, அச்சத்தில் வாழ்க்கை' மோடியிடம் நியாயம் கேட்கும் மும்பை ஹாஜி மஸ்தான் மகள்

மும்பையில் மாபியாவிற்கு முதன் முதலில் வித்திட்டது ஹாஜி மஸ்தான் ஆவார். மும்பை தென்பகுதியில் கடத்தலில் பிரதானமாக ஈடுபட்டிருந்த ஹாஜி மஸ்தான் மற்றொரு தாதாவான வரதராஜ முதலியார் என்பவருடன் இணைந்து செயல்பட்டா... மேலும் பார்க்க

விஜய்: `மீட்பர்; ஒரு அரசன் வருவான்!' - ஸ்கோர் செய்த திமுக; சுதாரித்த தவெக - கிறிஸ்துமஸ் விழா பின்னணி

விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை 'மீட்பர்' லெவலுக்கு பேச விஜய் 'ஒரு அரசன் வருவான்!' எ... மேலும் பார்க்க