செய்திகள் :

`சித்ரவதை, தற்கொலை முயற்சி, அச்சத்தில் வாழ்க்கை' மோடியிடம் நியாயம் கேட்கும் மும்பை ஹாஜி மஸ்தான் மகள்

post image

மும்பையில் மாபியாவிற்கு முதன் முதலில் வித்திட்டது ஹாஜி மஸ்தான் ஆவார். மும்பை தென்பகுதியில் கடத்தலில் பிரதானமாக ஈடுபட்டிருந்த ஹாஜி மஸ்தான் மற்றொரு தாதாவான வரதராஜ முதலியார் என்பவருடன் இணைந்து செயல்பட்டார். அதோடு திரைப்படத்துறையை சேர்ந்தவர்களுக்கும், தொழில் பிரமுகர்களுக்கும் இடையே மத்தியஸ்தராகவும் செயல்பட்டார். ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜ முதலியார் இரண்டு பேருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஹாஜி மஸ்தான் மகள் ஹசீன் மஸ்தான் மிர்ஷா, இப்பொது சர்ச்சைக்குரிய பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஹசீன் மஸ்தான் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ''நான் மைனராக இருந்தபோது எனது மாமா மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர்.

ஹாஜி மஸ்தான்

என்னை திருமணம் செய்த நபர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதோடு என்னை கொலை செய்யவும் முயற்சி செய்தார்.

எனது பெயரை தவறாக பயன்படுத்தி எனது பெயரில் உள்ள சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடினார். என்னை திருமணம் செய்தவர் எங்களது திருமணத்திற்கு முன்பே பல முறை திருமணம் ஆனவர். பாதுகாப்பும், அரவணைப்பும் தேவைப்பட்ட நேரத்தில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டேன். எனது குடும்பத்திடமிருந்து என்னை தனியாக பிரித்து அவர்களுடன் பேச முடியாமல் செய்தனர். எனது தந்தை இறந்ததே இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது.

எனக்கும், தன் தாயாருக்கும் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி காரணமாகவே எனது திருமணம் நடந்தது. அதனால் வெளி ஆதரவு இல்லாத ஒரு சூழலில் சிக்கிக்கொண்டேன். அந்த மன உளைச்சல் காரணமாகவே நான் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். பல ஆண்டுகளாக நீதிக்காக போராடிய பிறகுதான் நீதிக்காக நாட்டின் தலைமையை அணுக முடிவு செய்தேன். பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் கடுமையாக இருந்தால், குற்றம் செய்ய மக்கள் பயப்படுவார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு சந்தேகிக்கப்படுகிறார்கள். நான் குழந்தையாக இருந்தபோதும், பின்னர் பெரியவளாக மாறிய பிறகும் எனக்கு எந்த வித ஆதரவும் கிடைக்கவில்லை. உடனடி முத்தலாக் முறையை குற்றமாக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கை பாராட்டுக்குறியது. அது பெண்களுக்குச் சாதகமான ஒரு வலுவான நடவடிக்கை.

இந்த நடைமுறை பல ஆண்டுகளாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தடை விதித்ததன் மூலம் எண்ணற்ற பெண்களுக்கு நிவாரணம் அளித்த பெருமை பிரதமருக்கு சேர்த்திருக்கிறது. இருப்பினும், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கட்டாயத் திருமணங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதிலும் இதேபோன்ற அவசரம் தேவை. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனது தனிப்பட்ட சட்டப் போராட்டத்தில் தந்தையின் பெயரை இழுக்க வேண்டாம். நான் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தந்தையின் மரணத்திற்குப் பிறகு நடந்தவையாகும். அவற்றை அவரது கடந்த காலத்துடனோ அல்லது நற்பெயருடனோ தொடர்புபடுத்தவேண்டாம். எனது தந்தை ஒரு சர்ச்சைக்குரிய நபர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனது வழக்கு ஒரு பெண்ணாகவும், பாதிக்கப்பட்டவராகவும் உள்ளவரின் உரிமைகள் தொடர்பானது. கடந்த காலத்தில் என் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சிகள் நடந்தது. நான் இன்றும் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறேன்'' எனக் கூறியிருக்கிறார்.

பெருநிறுவனங்கள் பாஜகவிற்கு வழங்கிய ரூ.3,112 கோடி; யார் கொடுத்தார்கள்? காங்கிரஸிற்கு எவ்வளவு?

தேர்தல் பத்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று கடந்த ஆண்டு அந்தப் பத்திரங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதனால், பெரு நிறுவனங்கள் தற்போது அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் அறக்கட்டளைகள் (... மேலும் பார்க்க

விஜய்: `மீட்பர்; ஒரு அரசன் வருவான்!' - ஸ்கோர் செய்த திமுக; சுதாரித்த தவெக - கிறிஸ்துமஸ் விழா பின்னணி

விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை 'மீட்பர்' லெவலுக்கு பேச விஜய் 'ஒரு அரசன் வருவான்!' எ... மேலும் பார்க்க

TVK : `ஒளி ஒன்று பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்; Praise The Lord' - கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய், " இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணைய... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை முடிக்க போராடும் தாக்கரே சகோதரர்கள்: பாஜக-விடம் இறங்கும் ஷிண்டே!

மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக உள்ளாட்சியில் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேலையில் அரசியல... மேலும் பார்க்க