செய்திகள் :

Career: வெளிநாட்டில் 'ஆசிரியர்' பணி; ரூ.1.25 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

வெளிநாட்டில் கிராமிய நடன ஆசிரியர்கள், பரதநாட்டிய ஆசிரியர்களுக்கான பணி. இது ஓராண்டு ஒப்பந்த பணி ஆகும்

எந்தெந்த நாடுகள்?

மியான்மர், ரீயூனியன், இந்தோனேசியா, சீஷெல்ஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு, மலாவி, மொரிஷீயஸ், உகண்டா.

வயது: 25 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,25,000

பரதநாட்டியம்
பரதநாட்டியம்

என்ன தகுதி வேண்டும்?

ஆங்கிலம் நன்கு எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களில் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி, சிறந்த முறையில் வகுப்புகள் மேற்கொள்ளும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்?

குறிப்பிட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்து செலவுகள், விசா செலவுகள், தங்குமிட செலவுகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை வழங்கும்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, "பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028" என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

தபால் எப்போது அனுப்பப்பட வேண்டும்?

டிசம்பர் 31, 2025 மாலை 5.00 மணிக்குள்.

இந்தப் பணி குறித்து இன்னும் விவரமாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும், தமிழிலும் தேர்வு எழுதலாம்; CAPF & SSF-ல் 25,487 காலிப்பணியிடங்கள்

பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு போலீஸ், ரிசர்வ் போலீஸ் படை, சாஸ்திர சீமா பால் (SSB), இந்தோ திபெத் எல்லை போலீஸ், அசாம... மேலும் பார்க்க

டிகிரி முடித்திருக்கிறீர்களா? CBSE-ல் வேலைவாய்ப்பு - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education - CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆப... மேலும் பார்க்க

Career: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில் சம்பளம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? VP Wealth, AVP Wealth, வாடிக்கையாளர் உறவு நிர்வாகி - ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர். இது ஐந்தாண்டுகள் ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப்... மேலும் பார்க்க

Career: சென்னையில் உளவுத்துறையில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

உளவுத்துறையில் (Intelligence Bureau) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி? மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்மொத்த காலிப்பணியிடங்கள்: 362; சென்னையில் 10.வயது வரம்பு: 18 - 25 (சில பிரிவினருக்குத் தளர்வு... மேலும் பார்க்க