Career: வெளிநாட்டில் 'ஆசிரியர்' பணி; ரூ.1.25 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ண...
"நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?"- நடிகர் சிவராஜ்குமார்
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45'.
இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியிருக்கிறார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் வரும் டிச. 25 வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிச. 22) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்ட சிவராஜ்குமாரிடம் செய்தியாளர் ஒருவர், "தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து, நட்சத்திர நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருகிறார்கள்.
அதே போல கர்நாடகாவில் இருக்கும் நீங்கள், உபேந்திரா சார் எல்லாம் அரசியலுக்கு வரவில்லை. ஏன்? என்ன காரணம்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த சிவராஜ்குமார், " அரசியல் பற்றி எனக்கு தெரியாது. மக்களுக்கு என்ன பண்ண வேண்டுமோ அதை பண்ணிக்கொண்டு தான் இருக்கிறோம்.
நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு, அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?

இது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்" என்று சிவராஜ்குமார் பேசியிருக்கிறார்.















