சேலம் : சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - பெருமூச்சுவிட்...
Rohit: "கிரிக்கெட்டையே விடலாம்னு நினைச்சேன், ஏன்னா..."- 2023 உலகக்கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா ஹரியானா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரோஹித் 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
" 2023 உலக கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு, நான் மனதளவில் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்.

என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எதுவும் இல்லாமல் விட்டுச் சென்ற கிரிக்கெட்டையே விட்டு விடலாம் என்று எண்ணினேன்.
சிறிது நேரம் தேவைப்பட்டது. நான் மிகவும் நேசித்தது என் கண்முன்னே இருந்த கிரிக்கெட் மட்டும்தான்.
அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க முடியவில்லை. மெதுவாக என்னைத் தேற்றிக் கொண்டு, வலுப்பெற்று மீண்டும் மைதானத்திற்குத் திரும்பினேன்.
எல்லாருக்கும் அந்தத் தோல்வி பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனக்கும் அது மிக கடினமான காலமாகத்தான் இருந்தது.
ஏனென்றால் ஓரிரு மாதங்கள் இல்லை, நான் 2022ல் கேப்டன் ஆனதிலிருந்தே என் முழு உழைப்பை அந்த உலக கோப்பைக்காகத்தான் கொடுத்தேன்.
ஒரு விஷயத்திற்காக நான் அதிக உழைப்பைக் கொடுத்து நாம் எதிர்பார்க்காத தோல்வியைச் சந்திக்கும்போது அது கடினமாகத்தான் இருக்கும்.

இதுபோன்ற விஷயங்கள் எனக்கும் நடந்தது. ஆனால் இதன் மூலமாகத் தான் வாழ்க்கை இதோடு மட்டும் நின்றுவிடாது என்று உணர்ந்தேன்.
ஏமாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொண்டேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.


















