திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை ச...
T20 WC: `அவரின் தரம் குறித்து எல்லோருக்கும் தெரியும்; ஆனால்..!'- கில் இடம்பெறாதது குறித்து அகர்கர்
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல்( துணை கேப்டன்), ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, ஹர்ஷிப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.
இந்த அணியில் சுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், "சுப்மன் கில்லின் தரம் என்ன என்பது எல்லாருக்குமே தெரியும். அவர் இப்போது ரன் அடிக்கவில்லை அவ்வளவுதான். அணியின் காம்பினேஷனை மனதில் வைத்துதான் முடிவுகளை எடுத்தோம்.

கில் இல்லை என்பதால் அக்சர் துணை கேப்டனாக இருப்பார். டாப் ஆர்டரில் ஆடக்கூடிய விக்கெட் கீப்பர் வேண்டும் என்பதால் ஜித்தேஷ் சர்மா அணியில் இல்லை. மற்றபடி அவரிடம் எந்த பிரச்னையும் இல்லை" என்று அஜித் அகர்கர் பேசியிருக்கிறார்.













