திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை ச...
"அது முடியாத காரியம்; ஒப்பந்த முறையை கொண்டு வந்ததே அதிமுகதான்"- செவிலியர்கள் போராட்டம் பற்றி மா.சு
திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நேற்றுமுன்தினம் (டிச. 18) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கொரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செவிலியர்கள் போராட்டம் குறித்து தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
``செவிலியர்கள் இரண்டு, மூன்று கோரிக்கைளை வைக்கிறார்கள். அதில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கிறோம்.
காலிப்பணியிடங்களே இல்லாத நிலை இப்போது இருக்கிறது.
ஒப்பந்த செவிலியர் பணியாளர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதா தான்.
போராடுவது என்பது அவர்களின் உரிமை. பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராட வேண்டும். இன்று எடப்பாடி பழனிசாமி செவிலியர் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் செவிலியர்கள் பிரச்னைக்கு காரணமே அதிமுக தான்.

2014- 2015 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்த செவிலியர் நியமனத்தை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள்.
கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை.
ஆனால் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.
செவிலியர்களின் கோரிக்கை இன்னும் கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
கிட்டத்தட்ட 8000 பேர் ஒப்பந்த செவிலியர்களாக இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இவர்களின் சம்பளம் 14,000 ரூபாயாக இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 4000 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்.

காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர்கள் எல்லாம் அந்த காலிப்பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்.
ஆனால் இவர்கள் புதிதாக இவர்களுக்கு என்று காலிப்பணியிடங்களை உருவாக்க சொல்கிறார்கள். ஆனால் அது முடியாத காரியம்" என்று தெரிவித்திருக்கிறார்.













