வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
'பொங்கலுக்கு பிறகு தவெக-வுக்கு திருப்புமுனை' - செங்கோட்டையன் சர்ப்ரைஸ்
தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களுடன் களத்தில் பரபரக்க தொடங்கிவிட்டார்கள். அரசியலில் புதுவரவான தவெக கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எஸ்ஐஆர் பணி தொடர்பாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும். அதுதான் எங்கள் அனைவரின் கருத்து. தவெக ஈரோடு பொதுக்கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஓர் கருத்தை சொல்கிறார்கள். தவெகவை தவழும் குழந்தை என்று திமுக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தவழும் குழந்தைதான் பெரியவராகி, தன்னாட்சி வழங்குவார்கள்.
களத்தில் யார் இருக்கிறார்கள் என்கிற எங்கள் தலைவரின் விமர்சனத்துக்கு, தமிழக வெற்றி கழகம் களத்தில் இல்லாத கட்சி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அது அவரின் கருத்து நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து, இன்று மாலை எங்கள் தலைவரிடம் பேசிவிட்டு எந்த இடம், தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்வோம்.
எங்களைப் பொறுத்த வரையிலும் 2026 பொங்கல் பண்டிகை நிறைவடைந்த பிறகு தவெகவுக்கு திருப்புமுனையாக இருக்கும். அது எப்படி இருக்கும் என்பதை நாடே வியந்து பார்க்கும்." என்றார்.














