80-ல் நுழைந்த ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரி...
BB 9 : "இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?"- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.
நாமினேஷனில் சான்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் விஜய் சேதுபதி சாண்ட்ராவிடம் கேள்வி கேட்கிறார்.
``வாரம் முழுசும் அழுதிட்டு இருந்தா எப்படி வேடிக்கை பார்க்கிறது. எத்தனை மணிக்கு அவங்க பேக் பண்ணனும், எத்தனை மணிக்கு அவங்க சமைக்கணும், சாப்பிடணும்'னு நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்" என்று விஜய் சேதுபதி கேட்க ``இதை பிரச்னையாக்கணும்'னு நான் நினைக்கல சார்" என்று சாண்ட்ரா சொல்கிறார்.
அதற்கு, ``அப்பறம் ஏன் இவ்வளவு கேள்வி எழுப்புறீங்க. இது உங்க வீடு இல்ல. ஹவுஸ் மேட்ஸ் வழக்கமா செய்கிற வேலைய பத்தி நீங்க ஏன் மா சொல்றீங்க?" என்று காட்டமாகப் பேசுகிறார் விஜய் சேதுபதி.

















